ஜிஎஸ்டி மசோதா விவாதத்திலும் அம்மா புராணம்.. அதிமுக எம்.பியை 'கலாய்த்த' ராஜ்யசபா துணை தலைவர்
டெல்லி: ராஜ்யசபாவில் அடிக்கடி 'அம்மா' பெயரை உச்சரித்த அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணனிடம் துணை தலைவர் பி.ஜே.குரியன் ஜோக் அடிக்க அவை கலகலப்பானது.
ராஜ்யசபாவில் ஜிஎஸ்டி மசோதா மீதான விவாதம் இன்று பிற்பகல் துவங்கி நடந்து வருகிறது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மசோதாவை அறிமுகம் செய்து விவாதத்தை தொடக்கி வைத்தார்.
விவாதத்தின் போது பங்கேற்று பேசிய அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன், தனக்கு, இங்கு பேச வாய்ப்பளித்த 'அம்மாவுக்கு' என்று என்று கூறி பேச்சை தொடக்கினார்.

அம்மாவுக்கு நன்றி
நாடாளுமன்றத்தில் பேசும் அனைத்து அதிமுக உறுப்பினர்களுமே, அது லோக்சபாவோ, ராஜ்யசபாவோ, தவறாமல் 'அம்மாவுக்கு' நன்றி சொல்வது வழக்கம். எத்தனை அவசர, தலைபோகும் விஷயமாக இருந்தாலும், இந்த வார்த்தையை மட்டும் தவறாமல் அவர்கள் சொல்லத்தான் செய்வார்கள்.

சிரிப்பும், வியப்பும்
அதிமுக உறுப்பினர்களின் இந்த நடவடிக்கையை, பிற மாநில எம்.பிக்கள், வியப்போடும், சிரிப்போடும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

அதிமுக எதிர்ப்பு
நவநீதகிருஷ்ணன் பேசும்போது, இந்த மசோதாவில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார். அதிமுக இதனை கடுமையாக எதிர்க்கிறது. இந்த மசோதாவில் உள்ள சில அம்சங்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது என்றெல்லாம் தெரிவித்தார்.

மீண்டும் நன்றி
உரையை முடித்தபோது, மீண்டும் 'அம்மாவுக்கு நன்றி' சொல்லி அமர்ந்தார் அவர். அப்போது அவை தலைவர் இருக்கையில், துணை தலைவர் பி.ஜே.குரியன் அமர்ந்திருந்தார்.

அவையில் கலகல
நவநீதகிருஷ்ணனின் அம்மா புராணத்தை சீண்டி பார்க்கலாமே என்று நினைத்த குரியன், "பேச வாய்ப்பு கொடுத்த எனக்கு நீங்கள் நன்றி சொல்லவில்லையே" என்று நவநீதகிருஷ்ணனை பார்த்து கேட்க, அவையில் சிரிப்பொலி எழுந்தது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications