கணவர் குடிப்பழக்கத்தை கைவிடணுமா? வீட்ல கொண்டு வந்து குடிக்க சொல்லுங்க.. பாஜக அமைச்சர் வினோத ஐடியா
போபால்: கணவன்மார்கள் குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று நினைக்கும் பெண்கள், தங்கள் கணவர்களிடம் மதுவை வீட்டிற்கு வாங்கி வந்து குடிக்குமாறு அட்வைஸ் செய்ய வேண்டும் என்று மத்திய பிரதேச பாஜக அமைச்சர் அறிவுரை வழங்கியிருக்கிறார். அவரது இந்த பேச்சு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மோகன் யாதவ் உள்ளார். அவரது அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக இருப்பவர் நாரயண சிங் குஷ்வாஹா. இவர் அண்மையில் ஆண்கள் மதுவுக்கு அடிமையாவதை கட்டுப்படுத்த வினோத ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.

அதாவது, வெளியில் போய் குடிக்க வேண்டாம்... வீட்டில் வந்தே குடிங்க என கணவன்மார்களை பெண்கள் கேட்டுக்கொண்டால் குடிப்பழக்கம் குறைந்து விடும் என அட்வைஸ் செய்துள்ளார். மது மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பாக போபாலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக அமைச்சர் நாராயண சிங்க் குஷ்வாஹா கூறியதாவது: -
தாய்மார்களும், சகோதரிகளும் தங்களின் கணவன்மார்கள் குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று விரும்பினால், அவர்களிடம் முதலில் வெளியில் போய் குடிக்க வேண்டாம்.. வீட்டிற்கு வாங்கி வந்து என் முன்னால் குடியுங்கள் என்று சொல்லுங்கள். குடும்பத்தினர் முன்னிலையில் அவர்கள் குடிக்கும் போது, ஆண்களின் குடிப்பழக்கம் படிப்படியாக குறையும்.
இறுதியில் குடிப்பழக்கத்தை முற்றிலும் கைவிட்டு விடுவார்கள். மனைவி மற்றும் பிள்ளைகள் முன்னால் குடிப்பதை நினைத்து அவர்கள் வெட்கப்படுவார்கள். உங்களை பார்த்து நமது பிள்ளையும் குடிக்க பழகிவிடும் என்றும் கணவனிடம் மனைவி சொல்ல நியாபகப்படுத்த வேண்டும்" என்றார். பாஜக அமைச்சரின் இந்த பேச்சு கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சி அமைச்சரின் இந்த பேச்சு குறித்து கூறியதாவது:- அமைச்சரின் நோக்கம் சரியானதுதான். ஆனால் அதை சொல்ல வந்த முறை தவறானது. வீட்டில் கொண்டு வந்து குடிப்பது குடும்ப வன்முறையை அதிகரிக்கவே செய்யும். குடிப்பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும் என்று அட்வைஸ் செய்து விட்டு போயிருக்கலாம். அமைச்சரின் பேச்சு தேவையற்றது" என்றார்.
பாஜக அமைச்சர் நாரயண சிங்கின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். வீட்டில் கொண்டு போய் குடித்தால் மேலும் பிரச்சினைகள் அதிகரிக்குமே தவிர குடிப்பழக்கம் குறைவதற்கு சாத்தியம் இல்லை என அவர்கள் வாதிட்டு வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications