ஐஐடி குஹாத்தி மாணவர் ஹாஸ்டல் அறையில் சடலமாக மீட்பு.. மிகப்பெரிய போராட்டம்.. அஸ்ஸாமில் பதற்றம்
கொல்கத்தா: அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஐஐடியில் (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம்) உள்ள விடுதி அறையில் 21 வயது மாணவர் (ஐஐடி-ஜி) இறந்து கிடந்தார். இந்த மாணவருடன் சேர்த்து இதுவரை 4 மாணவர்கள் இறந்துள்ளனர். இதை கண்டு கொதித்து போன மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஐஐடி குவஹாத்தியில் மாணவர் போராட்டத்தால் பதற்றமான நிலை நீடிக்கிறது.
அஸ்ஸாம் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான குவஹாத்தியில் ஐஐடி செயல்படுகிறது.. புகழ் பெற்ற கல்வி நிறுவனமான இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் படித்து வருகிறார்கள். மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியாக ஹாஸ்டல் வசதி உள்ளது.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான குவஹாத்தி ஐஐடியில் மாணவர்கள் அடிக்கடி உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த சம்பவம் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடையே வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில், 3ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது மாணவர் நேற்று ஐஐடி குவஹாத்தியில் உள்ள விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் பெரும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த மரணம் எப்படி நடந்தது, இதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மாணவர்களின் தீவிரமான முற்றுகை போராட்டத்திற்கு மத்தியில் விளக்கம் அளித்துள்ள ஐஐடி குவஹாத்தி நிர்வாகம், எங்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவரை இழந்துவிட்டோம். இதுபற்றி புகார் அளிக்கையில், மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த கடினமான நேரத்தில் மாணவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐஐடி குவஹாத்தியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆதரவான மற்றும் பாதுகாப்பான சூழலை அதிகரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இது போன்ற நெருக்கடியான நேரங்களில், மாணவர்கள் மன ரீதியாக பலவீனமடைவதை தடுக்கவும், அவர்களின் நல் வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கவும், ஐஐடி குவஹாத்தி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சி அமைப்புகள் இந்த விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளதால் பதற்றமான நிலை நீடிக்கிறது. கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி, 24 வயதான எம்டெக் மாணவியும் அவரது விடுதி அறையில் இறந்து கிடந்தார். இதுவரை இந்த ஆண்டு மட்டும் 4 மாணவர்கள் ஐஐடி குவஹாத்தியில் இறந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications