இது எப்பூடி... கார் திருட்டு வழக்கில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ கைது!! கொள்ளை கும்பலுடன் தொடர்பு!
குவஹாத்தி: அஸ்ஸாமில் கார் திருட்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ. ருமிநாத் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு கொள்ளை கும்பலுடன் தொடர்பு உள்ளதாக என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருமிநாத்திற்கு அம்மாநில கார் கொள்ளை கும்பலுடன் தொடர்பு உள்ளது என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் ருமிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி லால் பருவா கூறுகையில், எம்.எல்.ஏ. ருமிநாத்தை நாங்கள் கைது செய்தோம். பின்னர் அவர் திஸ்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். விரைவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவோம்... அத்துடன் அவரை காவலில் எடுத்து விசாரிப்போம்...." என்றார்.
கார் கொள்ளை கும்பலுடன் தொடர்பு உடைய எம்.எல்.ஏ. ருமிநாத்திற்கு எதிராக கிரிமினல் சதிதிட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சர்ச்சைக்குரிய எம்.எல்.ஏ. ருமிநாத், கடந்த 2012-ம் ஆண்டு ஜாகீரை திருமணம் செய்துக் கொண்டார். அவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்யாமலே இஸ்லாமிய மதத்திற்கு மாறி இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டவர்.












Click it and Unblock the Notifications