ஆள் கடத்தலா... மைனர் பெண் கடத்தலா.... அனைத்திலும் அஸ்ஸாம்தான் 'டாப்'- தமிழகம் 3வது இடம்!!
டெல்லி: ஆள் கடத்தல் மற்றும் மைனர் பெண் கடத்தலில் அஸ்ஸாம் மாநிலம்தான் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.
2015ம் ஆண்டில் பதிவாகியுள்ள குற்றங்கள் குறித்த புள்ளி விவரங்களை அண்மையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஆள் கடத்தல் மற்றும் மைனர் பெண் கடத்திய வழக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
அஸ்ஸாமில் 3.22 கோடி மக்கள் தொகை கொண்ட அஸ்சாமில் 1294 ஆள் கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இது நாடு முழுவதிலும் பதிவாகியுள்ள ஆள் கடத்தல் வழக்குகளில் 21.7 சதவீதமாகும்.

மே. வங்கத்தில்...
அஸ்ஸாம் மாநிலத்தை தொடர்ந்து அதன் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் அதிக அளவில் ஆள் கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. 9.3 கோடி மக்கள் தொகையுள்ள மேற்குவங்கத்தில் 1,255 ஆள் கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் மொத்தமாக பதிவாகியுள்ள வழக்குகளில் 18.2 சதவீதமாகும்.

மொத்தம் 40%
இந்த இரண்டு மாநிலங்களிலும் பதிவாகியுள்ள ஆள்கடத்தல் வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 2,799. இது மொத்தமாக இரு மாநிலங்களையும் சேர்த்து 40 சதவீத அளவாகும்.

3- வது இடம் தமிழகம்
இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது தமிழ்நாடுதான். இங்கு 577 ஆள் கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இது மொத்த வழக்குகளில் 8.4 சதவீதமாகும்.2015ம் ஆண்டில் மட்டும் 6877 ஆள் கடத்தல் வழக்குகள் இந்தியா முழுவதும் பதிவாகியுள்ளது.

மைனர் பெண் கடத்தல்
மைனர் பெண்களை கடத்திய வழக்கிலும் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களே முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றன. நாடு முழுவதும் மைனர் பெண்கள் கடத்திய வழக்குகள் 3087 பதிவாகியுள்ளது. இதில் 1303 அஸ்ஸாமிலும், 1003 வழக்கு மேற்குவங்கத்திலும் பதிவாகியுள்ளது. இந்த இரு மாநிலங்களையும் சேர்த்து 74 சதவீதம் மைனர் பெண்களை கடத்திய வழக்குகள் பதிவாகியுள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications