ராகுலை கோவிலுக்குள் நுழையவிடாமல் யாரும் தடுக்கவில்லை- கோவில் தலைவர்
கவுஹாத்தி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை கோவிலுக்குள் நுழையவிடாமல் யாரும் தடுக்கவில்லை, மாறாக அவர் வருகைக்காக நாங்கள் 4 மணிநேரம் காத்திருந்தோம் என அஸ்ஸாம் கோவில் தலைவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடந்த வெள்ளிக்கிழமை அஸ்ஸாம் மாநிலத்திற்கு சென்றார். அங்கு பார்பேட்டாவில் உள்ள கோவிலுக்கு அவர் சென்றார். அப்போது அவரை கோவிலுக்குள் நுழையவிடாமல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தடுத்ததாக அவர் நேற்று தெரிவித்தார்.

கோவிலுக்கு சென்ற தன்னை தடுத்து நிறுத்த அவர்கள் யார் என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் இது குறித்து பார்பேட்டா கோவில் தலைவர் சர்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
கோவிலில் ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்ட் யாரும் இல்லை. இது வழிபாட்டு தலம். இங்கு வழிபாட்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. கோவிலில் அரசியல் எங்கு வந்தது? இங்கு உள்ள பெண்கள் எளிமையானவர்கள். தினமும் இரண்டு முறை கோவிலுக்கு வருவார்கள்.
அவர்கள் ராகுல் காந்தியை காண வாசலில் 4 மணிநேரம் காத்திருந்தனர். அவர்களுக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது என்றார்.












Click it and Unblock the Notifications