சட்டசபை தேர்தல் வாக்கு பதிவு நிறைவு: மேகாலயா, நாகாலாந்தில் 67%
மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
ஷில்லாங்/கோஹிமா: வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு முடிந்தது.
தலா 60 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாநிலங்களான மேகாலயா மற்றும் ஷில்லாங்கில் தலா 59 தொகுதிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெற்றது.
இந்த இரு மாநிலங்களில் மேகாலயாவில் இதுவரை பாஜக ஆட்சிக்கு வந்ததில்லை. எனவே இந்த முறை ஆட்சியை பிடித்து விட்டால் முதல் முறையாக பாஜக ஆட்சி என்ற பெருமை கிடைக்கும். ஆனால் நாகாலாந்தில் அங்குள்ள மாநில கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியில் ஒட்டிக் கோண்டது.

வாக்கு பதிவு
தற்போதும் அதே பாணியில் மற்றொரு மாநில கட்சியுடன் பாஜக தேர்தலை சந்தித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியுடன் போட்டி போட்டிக் கொண்டு பாஜக பிரசாரம் செய்தது, இரு மாநிலங்களிலும் கடந்த 25-ஆம் தேதியுடன் பிரசாரங்கள் ஓய்ந்தன. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 3 மணிக்கு முடிவடைந்தது.

துப்பாக்கிச் சூடு
மேகாலயா, நாகாலாந்தில் தலா 67 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. நாகாலாந்து வாக்கு பதிவின்போது ஏற்பட்ட வன்முறையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

பெண் வேட்பாளர்கள்
திரிபுரா மற்றும் மேற்கண்ட இரு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. நாகாலாந்தில் முதல் முறையாக பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

முட்டி மோதும் பாஜக
மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இரு மாநிலங்களிலும் தங்கள் தடத்தை பதிக்க பாஜக முட்டி மோதியது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications