நாடு முழுவதும் இன்று ஏடிஎம்கள் செயல்படாது: மோடி அறிவிப்பால் ஷாக்
நாடு முழுவதும் இன்று ஏ.டி.எம். மையங்கள் செயல்படாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
டெல்லி: நாடு முழுவதும் உள்ள வங்கிகள், மற்றும் தபால் நிலையங்கள் இன்று ஒரு நாள் மட்டும் செயல்படாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், ஏ.டி.எம். மையங்களும் செயல்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் நாடு முழுவதும் பண பரிவர்த்தனைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது: ஏழை மக்களுக்காவே அர்ப்பணிக்கப்பட்டது இந்த அரசு. ஏழை மக்களின் நலனுக்காக செயல்படும். நாட்டில் உள்ள ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த அரசாங்கம் ஏழை மக்களுக்கான அரசாக செயல்படுகிறது. நாட்டில் கருப்பு பணமும் ஊழலும் தான் ஏழ்மைக்கு காரணமாக உள்ளது. ஊழலுக்காக அரசு மட்டுமின்றி நாட்டு மக்களும் பாடுபட வேண்டும். அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. நமது அண்டை நாடுகள் இந்தியாவிற்குள் கள்ளநோட்டு புழக்கத்தை விட்டுள்ளது. கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால் இது தான் சரியான தருணம்.
மத்திய அரசின் கொள்கைகள் அனைத்தும் சமூகத்திற்கான வறுமை ஒழிப்புக்காக இந்த அரசு தொடர்ந்து போராடும் என்றார். மேலும், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனால் நாட்டு மக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்காக வருந்துகிறோம் என தெரிவித்த அவர், நாடுமுழுவதும் உள்ள ஏ.டி.எம்கள் புதன்கிழமை செயல்படாது எனவும், ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை ஏ.டி.எம். மையங்கள் இயங்கும் எனவும், நாடு முழுவதும் உள்ள வங்கிகள், தபால் நிலையங்களுக்கு புதன்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும் கூறினார். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, டிடி, காசோலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் மோடி தெரிவித்தார். திடீரென இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications