மீண்டும் ஹை டென்ஷனில் மணிப்பூர்.. துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? வெளியான ஷாக் தகவல்!
இம்பால்: மணிப்பூரில் புத்தாண்டு தினமான நேற்று மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், துப்பாக்கியால் சுட்டது யார்? எதற்காக சுட்டார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பிரேன் சிங் உள்ளார். கடந்த மே மாதம் முதல் பெரும் வன்முறை ஏற்பட்டது. மணிப்பூரில் வசிக்கும் மைத்தேயி-குக்கி இன மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் 3 மாதங்களை கடந்து நடந்தது. 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு திணறியது.

இரு பிரிவினரிடையே வெடித்த இந்த மோதலால் 180-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடு, உடைமைகளை இழந்தனர். பல ஆயிரம் பேர் அண்டை மாநிலத்தில் தஞ்சமடைந்தனர். பிறகு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பதற்றம் ஓரளவு தணிந்தது. எனினும், இதற்கிடையே தான் கடந்த சில வாரங்களாக மணிப்பூரில் அவ்வப்போது பதற்றமான சூழல் ஏற்பட்டு வருகிறது.
மீண்டும் பதற்றம்: இந்த நிலையில் தான், புத்தாண்டு தினமான நேற்று மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்துள்ளது. மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் உள்ள லிலோங் பகுதியில் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பணம் பறிக்க முயற்சித்ததாகவும் தொடர்ந்து தனது கையில் இருந்த தானியங்கி துப்பாக்கியை வைத்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டு தள்ளியதாகவும் இதில் 4 பேர் பலியானதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் கூறினர்.
இந்த சம்பவத்தால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து வன்முறை வெடிக்காமல் இருக்க தவுபால், இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு, கக்ஷிங் மற்றும் பிஷ்னுபர் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவுபால் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் பிரேன் சிங், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அரசு அனைத்தையும் செய்யும்: இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட பிரேன் சிங் கூறியதாவது:- அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகளை பிடிக்க போலீசார் குழுவை அனுப்பியுள்ளோம். குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவுமாறு லிலாங் பகுதி மக்களுக்கு இரு கரம் கூப்பி கோரிக்கை விடுக்கிறேன். சட்டத்தின் படி உரிய நீதி கிடைக்க அரசு அனைத்தையும் செய்யும் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்றார்.
உடனடியாக எம்.எல்.ஏக்களை அழைத்து அவசர ஆலோசனையையும் பிரேன் சிங் நடத்தினார். மணிப்பூர் எல்லையில் உள்ள நகரமான மோரேவில், போலீசாருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் மணிப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அங்கு வெடித்த வன்முறையால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
கண்மூடித்தனமாக சுட்டனர்: துப்பாக்கிச்சூடு குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர் அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் பணம் பறிக்க முயன்ற கும்பலை அடித்து விரட்டினர். அப்போது பயந்து ஓடிய மர்ம நபர்கள் தங்களிடம் இருந்த இயந்திர துப்பாக்கியை எடுத்து திடீரென கண்மூடித்தனமாக சுட்டனர்.
இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்த மக்கள் அங்கேயே சரிந்து விழுந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனால், ஆத்திரம் அடைந்த மக்கள் அங்கு நின்ற வாகனங்களுக்கு தீ வைத்தனர். துப்பாக்கி சூடு நடத்திய கும்பல் யார் என்ற விவரம் தெரியவில்லை" என்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications