இத்தனை வருஷம் கழித்து.. பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக பெண் நீதிபதி நியமனம்!
லாகூர்: பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக லாகூா் உயா்நீதிமன்ற நீதிபதி ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளாா். பாகிஸ்தானின் நீதித் துறை வரலாற்றில் உச்சநீதிமன்றத்துக்கு பெண் நீதிபதி நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.
55 வயதான ஆயிஷா மாலிக், ஹாவார்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, முன்னணி கார்ப்பரேட் மற்றும் சட்ட ஆலோசனை மையம் நடத்தி வந்தார். அதன்பிறகு 20 ஆண்டுகள் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டுவந்தார். சொத்துக் குவிப்பு மற்றும், விவாசாயிகள் பிரச்சனையில் சிறப்பான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார் ஆயிஷா மாலிக்.

ஆயிஷா மாலிக்
பாகிஸ்தான் நீதித்துறை இதற்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ''பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் 177-ஆவது பிரிவின்படி, லாகூா் உயா்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஆயிஷா மாலிக்கை, பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.

நீதிபதி
இதற்கான நியமனத்தில் அதிபா் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளாா்' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு பாகிஸ்தான் நீதித் துறை ஆணையம் கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கான நாடாளுமன்றக் குழு இரு தினங்களுக்கு முன் இதை பரிசீலித்தது.

தேர்வு
லாகூா் உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான தேர்வில் நான்காவது இடத்தில் இருந்தார் ஆயிஷா மாலிக். ஆனாலும், பணி மூப்பைக் கருத்தில் கொள்ளாமல் ஆயிஷா மாலிக்கைத் தோ்வு செய்து, அதிபரின் ஒப்புதலுக்கு அந்தக் குழு அனுப்பி வைத்தது. அதைத் தொடா்ந்து, ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

பதவியேற்பு
லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுகிறார். பாகிஸ்தானின் சட்ட கமிஷன் நேற்று இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இன்று பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆயிஷா மாலிக் பதவியேற்கிறார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications