2017-ம் ஆண்டு பேரணி தொடர்பான வழக்கு: குஜராத் எம்.எல்.ஏ. மேவானிக்கு 3 மாதம் ஜெயில்
காந்திநகர்: 2017-ம் ஆண்டு போலீசார் தடையை மீறி பேரணி நடத்தியது தொடர்பான வழக்கில் குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி உட்பட 9 பேருக்கு குஜராத் நீதிமன்றம் 3 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனையடுத்து ஜிக்னேஷ் மேவானி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் தலித் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் தலைவர் ஜிக்னேஷ் மேவானி. குஜராத் சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர் மேவானி. தற்போது காங்கிரஸ், மேவானியை தீவிரமாக ஆதரித்து வருகிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக உக்கிரமாக விமர்சனங்களை முன்வைப்பவர் ஜிக்னேஷ் மேவானி. இந்த பின்னணியில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டார் என கடந்த மாதம் அஸ்ஸாம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஜிக்னேஷ் மேவானி. இந்த வழக்கில் ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் கிடைத்தது.
ஆனால் அஸ்ஸாம் போலீசார் மற்றொரு வழக்கில் மேவானியை கைது செய்தனர். போலீசார் முன்னிலையில் பெண் போலீஸ் ஒருவரைத் தாக்கியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் 2-வது கைது சம்பவம் அரங்கேறியது. ஆனால் அஸ்ஸாம் போலீசாரை நீதிபதி கடுமையாக சாடி மேவானியை ஜாமீனில் விடுவித்தார்.
இதன்பின்னர் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார் ஜிக்னேஷ் மேவானி. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் கைது நடவடிக்கையானது குஜராத் பெருமையை சீர் குலைத்துவிட்டது. அஸ்ஸாம் போலீசாரால் நான் கைது செய்யப்பட்டது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி. இது பிரதமர் அலுவலகத்தால் திட்டமிடப்பட்ட சதித் திட்டம். குஜராத் தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில் என்னை முடக்கும் நடவடிக்கைதான் இது என்றார்.
இந்நிலையில் 2017-ம் ஆண்டு குஜராத்தில் போலீசார் அனுமதி இல்லாமல் விடுதலை பேரணி ஒன்றை நடத்தியதாக ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் இன்று ஜிக்னேஷ் மேவானி உட்பட 9 பேருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் மேவானி எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications