கிட்ட நெருங்கிடுச்சு தேதி! மூன்றாம் உலகப்போர் வருகிறது! பலிக்குது எல்லாம்! மொத்தமா அழிய போறாங்களா?
சண்டிகர்: உலகம் விரைவில் அழியும் என்று ஏற்கனவே கணிப்புகள் ஓடிக்கொண்டிருக்கும்போது, 3ம் உலகப்போர் நடக்க போவதாக பிரபல ஜோதிடர் கூறியிருப்பது, பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது.
பல்கேரிய நாட்டை சேர்ந்த பாபா வங்கா, கடந்த காலங்களில் வெளியிட்ட பல கணிப்புகள் அப்படியே நடந்திருக்கின்றன.. இரட்டை கோபுர தாக்குதல், செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானாவின் மரணம் எனப் பல சர்வதேச நிகழ்வுகளைத் துல்லியமாக கணித்தவர் இவர்தான்.

கணிப்புகள்: எனவே ஒவ்வொரு வருட துவக்கத்தின்போதும், பாபா வாங்கா, எழுதி வைக்கப்பட்டிருக்கும் கணிப்புகள் சோஷியல் மீடியாவில் வெளியாவது வழக்கம். அந்தவகையில், இந்த 2024ம் ஆண்டு குறித்தும் பாபா வங்கா பல குறிப்புகளை எழுதிவிட்டு சென்றிருக்கிறார்.
அதில், "2024ல் கடுமையான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் ஏற்படும்.. 2024ல் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.. இந்த வருடம் ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத நிகழ்வுகள் நடக்கும். மிகக் கொடூரமான பயோ ஆயுதங்கள் இந்தாண்டு பரிசோதனை செய்யப்படும்.. வரும் 5079-ல் உலகம் அழியும்" கணிப்புகளை கூறியிருக்கிறார்.
ஜோதிடர்: இந்நிலையில், இந்திய ஜோதிடர் ஒருவர் 3ம் உலகப்போர் குறித்த கணிப்புகளை தற்போது வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.. இந்த கணிப்புகள்தான் இணையத்தில் படுவேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது.
ஹரியானாவில் உள்ள பஞ்ச்குவை சேர்ந்த பிரபல ஜோதிடர் குஷால் குமார் இதுகுறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதாவது, மூன்றாம் உலகப்போர் குறித்த தன்னுடைய கணிப்புகளை தெரிவித்துள்ளார் குஷால் குமார்.
நேட்டா: அந்த பதிவில், "2024ம் ஆண்டு உலகம் முழுவதுமுள்ள ஹாட்ஸ்பாட்களில் போர் நிலைமை குறித்து மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று நாங்கள் கணித்திருக்கிறோம்... குறிப்பாக கொரிய தீபகற்பம், சீனா-தைவான், இஸ்ரேல், பிற மத்திய கிழக்கு நாடுகள், உக்ரைன்-ரஷ்யா போர் பதற்றம், மற்றும் நேட்டோ நாடுகளில் இந்த நிலைமை தீவிரமடையும்... இதன் பின்விளைவுகளை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும்..
சிலர் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகலாம் அல்லது ராஜினாமா கூட செய்துவிடலாம்.. அரசியல் துறையில் ஏற்ற தாழ்வுகளை நிராகரிக்க முடியாது.. சுருக்கமாக சொல்லப்போனால், கிரகங்களின் இயக்கத்தை பொறுத்து, ஒட்டுமொத்த ராணுவமும் கட்டுக்குள் வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும்.
சாத்தியமாகும்: ஜூன் 18, 2024 செவ்வாய்கிழமை ஒரு வலுவான கிரக தூண்டுதல், மூன்றாம் உலக போரைத் தூண்டும் ஆற்றலை கொண்டிருக்கிறது.. ஆனாலும் அது ஜூன் 10 அல்லது 29 அன்று கூட அது சாத்தியமாகும்" என்று என்று குஷால் குமார் பதிவிட்டுள்ளார்.
பிரபல தீர்க்கதரிசி பாபா வங்காவும் இப்படித்தான், 2024ல் மூன்றாம் உலகப் போரைப் பற்றியும் கணித்திருந்தார். இந்த 2024-ல் உயிரியல் தாக்குதல்கள், ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் 3ம் உலகப் போர் போன்ற பல பயங்கரமான நிகழ்வுகள் நடக்கும் என்றும் கணித்திருந்தார்.
பரபரப்பு: அந்தவரிசையில், உலக நிகழ்வுகளை கணிப்பதில் வல்லவரான இந்த ஜோதிடர் குஷால் குமார் இப்படி விலாவரியாக கூறியிருப்பதுடன், 3ம் உலகப் போருக்கு இன்னும் 3 வாரங்களே இருப்பதாக கூறியிருப்பது, பொதுமக்களை கதிகலங்க செய்து வருகிறது..!!












Click it and Unblock the Notifications