ஒடிசாவில் ஃபனி புயலுக்கு நடுவே பிறந்த குழந்தைக்கு ஃபனி என பெயர்சூட்டிய மக்கள்

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் புயல் கரையை கடந்த நேரத்தில் பிறந்த குழந்தைக்கு ஃபனி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தை நோக்கி வரும் எதிர்பார்க்கப்பட்ட ஃபனி புயல் ஆந்திராவை நோக்கி திரும்பி கடைசியில் ஒடிசா மாநிலம் பூரி அருகே மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்தது.

Baby Fani: In Bhubaneswar, odisha new born baby name fani after cyclone

இந்நிலையில் இந்த ஃபனி புயல் கரையை கடந்த நேரத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு புவனேஸ்வரில் ஃபனி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. முன்னதாக கஜா புயல் தமிழகத்தை கடந்த போதும் கஜா என சில குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகர் அருகே மன்சேஸ்வரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் மராமத்து பணி உதவியாளராக பணியாற்றிவரும் 32 வயது கர்ப்பிணி பெண், புவனேஸ்வரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இன்று காலை 11.03 மணிக்கு பெண் குழந்தைக்கு பிறந்தது. இதையடுத்து ஃபனி புயல் கடந்து சென்ற சமயத்தில் பெண் குழந்தை பிறந்ததால் அவருக்கு ஃபனி என பெயர் சூட்டி உள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+