For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாயாவதியின் ஹெலிகாப்டர் தரையிறங்க விவசாயி ஒருவரின் விளை நிலம் அழிப்பு

By Siva
Google Oneindia Tamil News

பதாவ்ன்: உத்தர பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தாரை சந்திக்க வந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் ஹெலிகாப்டர் தரையிறங்க ஒரு விவசாயியின் நிலம் அழிக்கப்பட்டுள்ளது.

Badaun Gang-Rape: For Mayawati's Visit, a Farmer's Land Cleared to Build a Helipad

உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் மாவட்டத்தில் உள்ள கத்ரா கிராமத்தைச் சேர்ந்த 15 மற்றும் 14 வயது சகோதரிகள் கடந்த மாதம் 27ம் தேதி இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள் மரத்தில் தொங்கவிடப்பட்டன. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற கதார் கிராமத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று வந்தார். அவரது வருகையையொட்டி கிராமத்தில் விவசாயி ஒருவரின் விளை நிலம் அழிக்கப்பட்டு அங்கு ஹெலிபேட் அமைக்கப்பட்டது. மாயாவதி சிறுமிகளின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

முன்னதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A farmer's land in Badaun district has been cleared as BSP chief Mayawati visited the family of the two sisters who were sexually assaulted and killed on may 27.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X