பெங்களூரில் பெண்கள் கழிவறைக்குள் புகுந்த 18வயது வாலிபருக்கு தர்ம அடி
பெங்களூர்: பெண்கள் கழிவறைக்குள் சென்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூர் மடிவாளா மார்க்கெட் பகுதியை ஒட்டி பெண்களுக்கான பொது கழிவறை உள்ளது. சம்பவத்தன்று, பெண்கள் சிலர் கழிவறைக்குள் சென்ற நேரத்தில், சித்தார்த்நகர் குடிசை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற 18 வயது வாலிபர், திடீரென கழிவறைக்குள் நுழைந்துவிட்டார்.
கூச்சலிட்ட பெண்கள்
திடீரென ஒரு ஆணை பார்த்த அதிர்ச்சியில் உள்ளேயிருந்த பெண்கள் கத்தி கூச்சலிட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் சென்றவர்கள் விரட்டி சென்று ரமேஷை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
கைது செய்த போலீசார்
தகவல் அறிந்து மடிவாளா போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை கைது செய்தனர்.
சார்.. நான் பிக்பாக்கெட் சார்..
விசாரணையில், பிக்பாக்கெட் அடித்துவிட்டு தப்பியோடும்போது தெரியாமல், பெண்கள் கழிவறைக்குள் புகுந்துவிட்டதாக ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இவருக்கு இதே வேலையாமே..
ஆனால் அப்பகுதி பெண்களோ, ரமேஷுக்கு பெண்கள் கழிவறையை எட்டிபார்ப்பது அன்றாட வாடிக்கை என்று குற்றம்சாட்டுகிறார்கள்.
ஆபாச வார்த்தைகள்
கழிவறைக்கு செல்லும் பெண்களை பார்த்து நானும் உள்ளே வரட்டுமா என்பது போன்ற ஆபாச வார்த்தைகளை பேசி ரமேஷும் அவரது நண்பர்கள் மூன்றுபேரும் கேலி செய்வது வழக்கம் என்று பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications