பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக 'வாரங்கல்' மொபைல் எண்ணை கண்டுபிடிக்க போலீஸ் தீவிரம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தெலுங்கானாவின் வாரங்கலைச் சேர்ந்த மொபைல் எண்ணை கண்டுபிடிக்க பெங்களூர் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பெங்களூர் சர்ச் சாலையில் குண்டுவெடித்த இடத்தை ஆராய்ந்த போலீசார் வெடிபொருட்கள், டைம் பாம் மற்றும் துணி ஆகியவற்றுடன் தெலுங்கு நாளிதழ் ஒன்றின் மூலம் வெடிகுண்டு சுற்றி வைக்கப்பட்டிருந்தது கண்டறிந்தனர்.

Bangaluru police track mobile number in warrangal

அந்த தெலுங்கு நாளிதழில் ஒரு மொபைல் எண் குறிக்கப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர். இந்த மொபைல் எண் தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கலைச் சேர்ந்தது என்று முதல் கட்டமாக தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வாரங்கல் போலீசாரை தொடர்பு கொண்டு அந்த எண் யாருடையது என்று விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி தன்னுடைய மொபைல் எண்ணை இவ்வளவு எளிதாக குறித்து வைத்திருக்கமாட்டான் என்ற போதும் அந்த எண்ணுக்கும் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா என்ற கோணத்தில் அதை கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+