கொல்கத்தாவில் வங்கதேச எம்பி படுகொலை- துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட கொடூரம்- 3 பேர் கைது!
கொல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்துக்கு சிகிச்சைக்கு வந்த வங்கதேச நாட்டின் எம்பி அன்வருல் அசீம் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படுகொலை சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேச நாட்டின் எம்பியான அன்வருல் அசீம், கொல்கத்தா மஜிதியா பகுதியில் சுபாஷ் அகர்வால் என்பவர் வீட்டில் முன்னர் வசித்து வந்தார். கொல்கத்தாவின் சிந்தி பகுதியை சேர்ந்த நகை ஏற்றுமதியாளர் கோபால் பிஸ்வாஸின் நெருங்கிய குடும்ப நண்பராகவும் இருந்தவர் அன்வருல் அசீம்.

கொல்கத்தாவில் நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்திருந்தார் அன்வருல் அசீம். கடந்த 13-ந் தேதி கோபால் பிஸ்வால் வீட்டில் இருந்து புறப்பட்ட அன்வருல் அசீம் திடீரென மாயமானார். இதனால் அவரை கொல்கத்தா போலீசார் வலைவீசித் தேடி வந்தனர். 4 நாட்கள் தேடுதலுக்குப் பின்னர் மே 17-ந் தேதி அன்வருல் அசீம் போன் சுவிட்ச் ஆனதால் தேடுதம் பணி முடங்கியது.
இந்த நிலையில் வங்கதேசத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 3 பேரும்தான் கொல்கத்தாவில் வங்கதேச எம்பி அன்வருல் அசீமை துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்ததாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்த கொலைக்கான காரணத்தை உடனடியாக தெரிவிக்க முடியாது; இதில் ரகசியம் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார் வங்கதேச உள்துறை அமைச்சர்.
கொல்கத்தாவில் வங்கதேச எம்பி மாயமானது தொடர்பாக கொல்கத்தா போலீஸ் ஒரு பக்கம் தேடுதல் நடத்திய நிலையில் வங்கதேச காவல்துறையும் விசாரணை நடத்தியது. இந்த விசாரணைகளின் அடிப்படையில் அன்வருல் அசீமை படுகொலை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனராம்.
அதே நேரத்தில் அன்வருல் அசீமை படுகொலை செய்த நபர்கள் வங்கதேச நாட்டவர்தான் என்பதால் இந்தியாவுடனான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறது அந்நாட்டு அரசு. மேலும் அன்வருல் அசீம் உடல் பாகங்கள் மீட்கப்பட்டதா? இல்லையா? என்பதை கொல்கத்தா போலீசாரும் தெரிவிக்கவில்லை. வங்கதேச காவல்துறையும் தெரிவிக்கவில்லை.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications