For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்ல ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலை பத்தி விடுங்க...வங்கி ஊழியர் சம்மேளனம் போர்க்கொடி!

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: செல்லாத ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் எந்த ஒரு முன்னேற்பாடும் செய்யாமல் குழப்பங்களுக்கு காரணமாக இருந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று அனைத்து வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வலிய்றுத்தியுள்ளது.

நவம்பர் 8-ந் தேதி ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதலே ஒட்டுமொத்தமாக இந்திய மக்களின் வாழ்க்கையே பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது. நாடு முழுவதும் அசாதாரணமான நிலை நிலவுகிறது.

Bankers' union wants RBI governor out

ஆன்லைன் வர்த்தகங்களில் சுகம் காணுகிற சுகவாசிகள்தான், இதையும் தாங்கிக் கொள்ளுங்கள் என சட்டாம்பிள்ளைத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. 10 நாட்களுக்கும் மேலான இயல்பு வாழ்க்கையை வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் அப்பாவி மக்கள் தொலைத்து கிடக்கிறார்கள்.

மத்திய அரசின் இந்த தடலாடி நடவடிக்கை வங்கி ஊழியர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அனைத்து வங்கி ஊழியர் சம்மேளனத்தின் துணைத் ஹலைவர் தாமஸ் பிராங்கோ கூறியதாவது:

ரூபாய் நோட்டாது செல்லாது விவகாரத்தில் முறையான முன்னேற்பாடுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் மேற்கொள்ளவில்லை. இதற்கு உர்ஜித் படேல்தான் பொறுப்பேற்க வேண்டும். தற்போதைய இந்த சூழலுக்குப் பொறுப்பேற்று உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு பிராங்கோ கூறினார்.

English summary
The All India Bank officers' Confederation has demanded RBI governor Urjit Patel's resignation over repercussions of unprepared implementation of demonetisation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X