மேற்கு வங்கத்தில் 9 முறை எம்பியாக இருந்த தமிழர்.. வாசுதேவ் ஆச்சார்யா காலமானார்

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேற்குவங்க மாநிலத்தின் பங்குரா தொகுதியில் இருந்து 9 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட தமிழரான வாசுதேவ் ஆச்சார்யா உடல் நலக்குறைவால் காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய வாசுதேவ் ஆச்சார்யா மேற்குவங்க மாநிலத்தின் பங்குரா தொகுதியில் இருந்து 9 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். 81 வயதாகும் இவர்,, நீண்ட நாட்களாக வயது மூப்பால் , நோய்களால் பாதிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலன் இன்றி இன்று காலமானார்.

Bankura former MP Marxist Communist Party leader Vasudev Acharya passed away due to ill health

யார் இந்த வாசுதேவ் ஆச்சார்யா: தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்திலிருந்து மேற்கு வங்கம் புருலியாவில் குடியேறிய தமிழ் குடும்பத்தில் பிறந்தவர் வாசுதேவ் ஆச்சார்யா. இவர் மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் 1942ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி பிறந்தார். புருலியாவிலேயே தனது கல்வியை முடித்தார். மாணவப் பருவத்திலேயே இடதுசாரி இயக்கத்தில் தீவிரமாக சேர்ந்தார். அப்போது பல்வேறு பழங்குடி இயக்கங்கள் மற்றும் எழுத்தறிவு பிரச்சாரங்களில் பஸ்சிமாஞ்சல் பிராந்தியத்தின் தலைவர்களில் முக்கியமானவராக வாசுதேவ் ஆச்சார்யா உயர்ந்தார்.

வாசுதேவ் ஆச்சார்யா 1980 இல் பாங்குரா மக்களவைத் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு, 2014 வரை தொடர்ந்து பாங்குரா தொகுதியின் எம்.பி.யாக இருந்தார். வாசுதேவ் ஆச்சார்யா ரயில்வே ஊழியர் சங்க இயக்கத்தின் முக்கிய முகமாகவும் நீண்ட காலமாக திகழ்ந்தார்.

வாசுதேவ் ஆச்சர்யா சிபிஐ(எம்) மத்தியக் குழு மற்றும் மாநிலக் குழு உறுப்பினராகவும் நீண்ட காலம் இருந்தார். 1980 தேர்தல்களில், சிபிஐ(எம்) மாநிலத் தலைமை பீமன் போஸை பங்குரா மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த விரும்பியது. ஆனால் பிமன் அப்போதைய மாநிலச் செயலர் பிரமோத் தாஸ்குப்தாவிடம் தான் வகிக்கும் பொறுப்பிலேயே நீடிக்க விரும்புவதாகக் தெரிவித்தார். அந்த நேரத்தில் பாங்குராவிற்கு சிறந்த வேட்பாளரை கண்டுபிடிக்கும் பணி பீமனிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்படி பீமன் போஸால் வாசுதேவ் ஆச்சர்யாக 1980 ஆம் ஆண்டு பங்குரா மக்களவைத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது முதல் முறையாக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு, 2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 முறை எம்.பி.யாக இருந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் வேட்பாளரும் நடிகையுமான மூன்மூன் சென்னிடம் தோல்வியடைந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், பொலிட்பீரோ உறுப்பினருமான முகமது சலீம், வாசுதேவ் ஆச்சார்யாவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், வாசுதேவிற்கு வெளிநாட்டில் ஒரு மகள் இருப்பதாகவும், அவர் செகந்திராபாத் வந்த பிறகு இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் கூறினார்.

வாசுதேவ் ஆச்சார்யா மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரும், முன்னாள் எம்பியுமான வாசுதேவ் ஆச்சார்யாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவர் ஒரு தொழிற்சங்கத் தலைவராகவும், வலிமையான மக்களை உறுப்பினராகவும் இருந்தார். அவரது மறைவு பொது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு இரங்கல்" என குறிப்பிட்டுள்ளார். வாசுதேவ் ஆச்சர்யா மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+