தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!
தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆளுநராக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை பதவி வகித்து வந்த கே.ரோசையாவின் பதவிக் காலம் முடிவடைந்தது. அதன் பின்னர் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் கடந்த ஆண்டு 2016-இல் நியமனம் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்பாக இருந்து வரும் நிலையில் நிரந்தர ஆளுநரை நியமிக்காதது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில் மேகாலயா மாநில ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மொத்தம் 5 மாநிலங்களுக்கு ஆளுநர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். தமிழகத்துக்கு பன்வாரிலால், அருணாச்சலப் பிரதேசத்துக்கு பி.டி.மிஸ்ரா, பீகாருக்கு சத்யபால் மாலிக், அஸ்ஸாமிற்கு ஜகதீஷ் முகி, மேகாலயாவுக்கு கங்கா பிரசாத் ஆகியோர் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் ஓராண்டுக்கு பிறகு தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் நியமனம் செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications