For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோஹ்லி தேர்வு: பிசிசிஐ அறிவிப்பு !

By Karthikeyan
Google Oneindia Tamil News

மும்பை: பிசிசிஐயின் இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் விராட் கோஹ்லிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வீரராக திகழ்பவர் விராட் கோஹ்லி. தனது அதிரடி ஆட்டத்தால் ஏராளமான ரசிகர்களை கொண்ட இவருக்கு இந்த வருடத்தின் சிறந்த வீரர் விருதை பி.சி.சி.ஐ. அறிவித்து கவுரவப்படுத்தியுள்ளது. பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர், செயலாளர் அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் அடங்கிய பிசிசிஐ விருது கமிட்டி விராட் கோஹ்லியை தேர்வு செய்தது. ஜனவரி 5 ஆம் தேதி அன்று மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

BCCI has announced to virat kohli for cricketer of the year

அதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானிக்கு இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது விராட் கோஹ்லிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

27 வயதான விராட் கோஹ்லி, ஆஸ்திரேலியா தொடரின்போது டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த டோனி பாதியிலேயே டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் கோஹ்லி, டெஸ்ட் அணி கேப்டனாக பொறுப்பெற்றார்.

இவரது தலைமையில் இதுவரை இந்தியா அணி 10 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது. இதில் 5 போட்டியில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் மூன்றில் டிராவும் ஆகியுள்ளது. இவரது தலைமையில் இந்தியா 22 வருடத்திற்குப் பிறகு இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி சாதனைப்படைத்தது. அத்துடன் சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை 3-0 எனக் கைப்பற்றியது.

கோஹ்லி 15 டெஸ்ட் இன்னிங்சில் விளையாடி 640 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 42.67 ஆகும். 20 ஒருநாள் போட்டியில் விளையாடி 623 ரன்கள் சேர்த்துள்ளார்.

English summary
Indian Test captain Virat Kohli was on Thursday named 'Cricketer of the Year',
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X