சாரி தெரியாம பண்ணிட்டோம்'... நலமுடன் இருக்கும் நபரை... வன்முறையில் பலியானதாக கூறிய பாஜக வருத்தம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வன்முறையில் பலியானதாக உயிருடன் இருக்கும் செய்தியாளரின் புகைப்படத்தை பாஜக பகிர்ந்த நிலையில், அது தவறுதலாக நடந்துவிட்டதாக பாஜக வருத்தம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வென்று ஆட்சியைப் பிடித்தது. மொத்தமுள்ள 292 இடங்களில் 213 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

Bengal BJP responds to its video calling India Today journalist post-poll violence victim, blames hyperlink

தேர்தலில் கடும் போட்டியைத் தரும் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார்

தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்தே திரிணாமுல் தொண்டர்கள் பயங்கர வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக பாஜக தலைவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதன்படி திரிணமூல் கட்சியினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக ஒருவரது படத்தை பாஜக தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தது.

அவர் இந்திய டுடே செய்தி நிறுவனத்தில் அப்ரோ பானர்ஜி என்பது தெரியவந்தது அவர் தனது ட்விட்டிரில் "நான் தான் அப்ரோ பானர்ஜி, நான் மிக நலமாக சிதல் குச்சியிலிருந்து 1,300 கி.மீ தூரத்தில் உள்ளேன். ஆனால் பாஜக ஐடி பிரிவு என் பெயர் மானிக் மொய்த்ரா என்றும் நான் சிதல் குச்சியில் உயிரிழந்துவிட்டதாகவும் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இந்த போலி செய்திகளை நம்ப வேண்டாம். நான் (இன்னும்) உயிருடன் தான் இருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு உடனடியாக வைரலானது. பாஜக திட்டமிட்டு போலி செய்திகளைப் பரப்புவதாகப் பலரும் விமர்சித்தனர். இந்நிலையில், செய்தியாளரின் புகைப்படம் தவறுதலாக இணைக்கப்பட்டுவிட்டதாக பாஜக விளக்கமளித்துள்ளது. ஆப்ரோ பானர்ஜியின் கட்டுரை ஒன்றின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும்போது, தவறுதலாக அவரது புகைப்படம் பயன்படுத்தப்பட்டுவிட்டதாக பாஜக தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+