ஈரக்குலையே நடுங்குதே.. ஆட்டை அறுப்பது போல.. டீக்கடை பெஞ்சில் "அந்த" உருவம்.. யாரிந்த "மனித மிருகம்"
கொல்கத்தா: டீக்கடை பெஞ்ச்சில், மனைவியின் தலையுடன் உட்கார்ந்திருந்த கணவனிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. இது தொடர்பான கூடுதல் விவரங்களும் வெளியாகி உள்ளன.
மேற்கு வங்க மாநிலம், பதாஷ்பூர் அருகே சிஸ்திபூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் கவுதம் குச்சாயத்.. 35 வயதாகிறது. இவரது மனைவி பெயர் புல்ராணி..

தம்பதி: இந்நிலையில், வழக்கம்போல், தம்பதிக்குள் தகராறு நடந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கவுதம், அரிவாளை எடுத்து மனைவியின் "தலை"யை, அறுத்து துண்டித்துவிட்டார். அத்துடன், "தலையை" எடுத்துக் கொண்டு, தெருவெல்லாம் ஆவேசமாக நடந்து வந்தார். சாலையெங்கும் ரத்தம் சொட்ட சொட்ட, கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டே நடந்தார். ஒருகையில் மனைவியின் "தலை", இன்னொரு கையில் அரிவாளுடன் நடந்து சென்று அருகிலிருந்த பஸ் ஸ்டாண்டுக்குள் புகுந்தார்..
பஸ் ஸ்டாண்டில், கையில் "தலை"யை வைத்துக் கொண்டே குதித்து குதித்து ஆடினார்.. தனக்குத்தானே பேசிக்கொண்டார். அங்கிருந்த பெஞ்ச் ஒன்றில் சிறிதுநேரம் உட்கார்ந்திருந்தவர், மீண்டும் ஆவேசமாக குதித்து குதித்து ஆடினார். இதைப்பார்த்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.. ஒருசிலர் இந்த காட்சியை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டனர்.
அச்சப்பட்ட மக்கள்: போலீசார் விரைந்து வந்து, இங்குமங்கும் ரத்தக்களறியுடன் குதித்து கொண்டிருந்த, கவுதமை படாதபாடு பட்டு சுற்றிவளைத்து பிடித்தனர். இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி பதற வைத்து கொண்டிருக்கிறது. தற்போது கைதான கவுதமிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில், இந்த மனித மிருகம் குறித்த கூடுதல் தகவல்களும் வெளியாகி உள்ளன.
பஸ் ஸ்டாண்டில் என்ன நடந்தது என்பது குறித்து நேரில் கண்ட பொதுமக்கள் சில தகவல்களை சொல்கிறார்கள்.. மேற்கு வங்க மாநிலத்தில் காளி வழிபாடு பிரபலம்.. அதனால், பஸ் ஸ்டாண்டுக்குள் புகுந்ததுமே மனைவியின் தலையை கையில் வைத்து குதித்து ஆடி, காளியைவே போல காட்சி தர முயன்றாராம் கவுதம்.
டீக்கடை: பிறகு, பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு டீக்கடைக்கு போனாராம் கவுதம்.. அங்கே வாசலில் போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்துள்ளார்.. ஒருபக்கம் தலையையும், இன்னொரு பக்கம் அரிவாளையும் வைத்துக் கொண்டு பெஞ்சில், கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தாராம்.. அப்போதுதான், அவரால் பிறரது உயிருக்கு அச்சம் இல்லை என்பது உறுதியாகி, ஒருசிலர் கவுதமை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் பெஞ்சில் உட்கார்ந்திருந்தாராம்.. அப்போது அவர் ஒரு வன்முறை மனநிலையில் இருந்ததாகவும், யாரும் அவருக்கு அருகில் செல்லத் துணியவில்லை என்றும் சொல்கிறார்கள்.. பதாஷ்பூர் போலீசாரார், ஒரு குழுவாக இறங்கிதான், கவுதமை பிடிக்க முடிந்திருக்கிறது.
முரட்டு சுபாவம்: கைதான கவுதம் இயல்பாகவே, முரட்டு சுபாவம் கொண்டவராம். சின்ன வயசில் இருந்தே பயங்கரமான செயல்களை மட்டுமல்லாமல், கோரமான விபரீதங்களிலும் ஈடுபடுவாராம். இதை கவுதமின் பெற்றோர்கள் போலீசாரிடம் விசாரணையில் தெரிவித்திருக்கிறார்கள்.
இப்படித்தான் 3 வருடங்களுக்கு முன்பு, கொல்கத்தாவில் உள்ள அலிபூர் உயிரியல் பூங்காவுக்கு கவுதம் சென்றிருக்கிறார். அங்கே கூண்டில் அடைக்கப்பட்டிருந்த சிங்கத்துடன மோத நினைத்துள்ளார். எனவே, பல கட்டுப்பாடுகள் பூங்காவில் இருந்தாலும், கூண்டு அடைப்பிற்குள் எகிறி குதித்துள்ளார். அதாவது, மிருகக்காட்சிசாலையில், கட்டண நுழைவுக்காக தான் வாங்கியிருந்த டிக்கெட்டை, சிங்கத்தின் முன்பு காட்டுவதற்கு நினைத்தாராம்..
உயிருடன் மீட்பு : இதற்காகவே, அன்றைய தினம் பூங்காவில் காலை 11 மணிக்கு உள்ளே நுழைந்து, காம்பவுண்ட் சுவரை எகிறி குதித்து, இரண்டு வேலிகளையும் தாண்டி குதித்து சென்றிருக்கிறார். இவர் உள்ளே குதித்ததுமே, கூண்டுக்கு வெளியே இருந்த சிங்கம், அவரை இழுத்துச் செல்ல முயன்றுள்ளது.. ஆனால், அங்கிருந்த பார்வையாளர்கள், கதறி கூச்சலிடவும், உயிரியல் பூங்கா அதிகாரிகள் அவரை சரியான நேரத்தில் மீட்டனர்.
எனினும், கவுதமின் வலது கால், தோள்கள் மற்றும் இடுப்பில் படுகாயமும் ஏற்பட்டிருக்கிறது.. எனினும், கவுதம் நூலிழையில் காப்பாற்றப்பட்டார்.
யார் இவர்: கவுதம் ஒரு நடைபாதை வியாபாரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.. 8 வருடத்துக்கு முன்பு திரமணமாகி உள்ளது.. இவருக்கு ஒரே மகன் இருக்கிறான்.. அவனுக்கு 5 வயதாகிறதாம்.
கல்யாணம் ஆனதிலிருந்தே, மனைவியை சந்தேகித்தவாறே இருந்துள்ளார். வேறு யாருடனோ மனைவிக்கு தொடர்பு இருப்பதாக நினைத்து, தினம் தினம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த சண்டைதான், மனைவியின் தலையை துண்டிக்கும் அளவுக்கு சென்றுள்ளது.. காதலர் தினத்தன்று இப்படி கொடுமையை செய்துள்ளார் கவுதம்.
விசாரணை: துண்டிக்கப்பட்ட தலை மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்தை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. ஆனால், கவுதம் எப்போதுமே நார்மலாக இல்லை என்றும், சரியான மனநிலையில் இல்லையில் இல்லாததால், தாங்கள் யாருமே அவரிடம் பேசியதில்லை என்றும் உள்ளூர் மக்கள் போலீசில் தெரிவிக்கிறார்கள்.. கவுதமிடம் மட்டுமல்லாமல், கவுதமின் பெற்றோரையும் காவலில் வைத்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள் போலீசார்..!!!
துண்டித்த "தலை"யுடன் டீக்கடை பஸ் ஸ்டாண்டு பெஞ்சில், கூலாக உட்கார்ந்திருந்தி கவுதமின் வீடியோ இன்னமும் இணையத்தில் பரவி"ரத்தவாடை" வீசிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications