எங்க பாரம்பரியம், நாங்க காக்காம வேற யாரு காப்பாத்துவா.. பெங்களூரில் ஓங்கி முழங்கிய தமிழர்கள்!
ஜல்லிக்கட்டு எங்களது பாரம்பரியம். அதைக் காக்க நாங்கள் போராட்டத்தில் குதிப்பதில் என்ன தவறு என்று பெங்களூருவில் நடந்த போராட்டத்தில் தமிழர்கள் கேட்டனர்.
பெங்களூரு டவுன்ஹாலில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழர்களுடன் இணைந்து கன்னடர்களும் கைகோர்த்துப் போராடினர். ஜல்லிக்கட்டுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தனர்.
தமிழர்கள் பலரும் மத்திய பாஜக அரசு மீதுதான் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை அழிக்க முயல்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று அவர்கள் ஆவேசமாகக் கூறினர். போராட்டத்தில் கலந்து கொண்ட சிலரின் பேச்சிலிருந்து...!

ரமேஷ் கண்ணா
நான் தமிழர். நாங்கள் பெங்களூருவில் பல காலமாக வசித்து வருகிறோம். இங்குதான் பிறந்தோம். நாங்கள் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம். எங்களது பாரம்பரியத்தைக் காக்கும் பொறுப்பு எங்களுக்கு உண்டு.

கார்த்திக்
காளை காட்சிப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய விலங்கு அல்ல. அது காட்டு விலங்கும் அல்ல. அதை வழிபட்டு வருகிறோம். அதற்கு யாரும் தீங்கு செய்வதில்லை. பீட்டா தவறாக செயல்பட்டு வருகிறது. அதைத் தடை செய்ய வேண்டும்.

பிரசாந்த்
காளைகளுக்கு துன்புறுத்தல் நடக்கிறது என்று பீட்டா கூறுகிறது. கால் நடை வளர்ப்பை அது கட்டுப்படுத்த முயல்கிறது. அது கார்ப்பரேட் கம்பெனி அல்ல கால்நடை வளர்ப்பு. ஜல்லிக்கட்டை முறைப்படுத்தலாம். ஆனால் தடை செய்வது நியாயமற்றது.

நந்தா
ஏற்கனவே பல விதிமுறைகள் அமலில் உள்ளன. கால்நடைகளை முறையாக சோதனையிட்ட பின்னரே அனுமதிக்கிறார்கள். மாடு பிடி வீரர்களுக்கும் சோதனை நடக்கிறது. இது உள்ளூர் காளை மாடுகளை அழிக்கும் முயற்சியாகும். அதை அனுமதிக்க முடியாது.
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications