பெங்களூர்வாசிகளே, யார் 50 ரூபாய் கொடுத்தாலும், உடனே வாங்கி பாக்கெட்டி்ல் போட்டுக்காதீங்க!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் கள்ள நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக 50 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது.

இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் நம் நாட்டில் கள்ள நோட்டுகளை அதிக அளவில் புழக்கத்தில் விட்டு வருகிறது. மேலும் வங்கதேசத்தில் இருந்து தீவிரவாதிகள் பாகிஸ்தான் அளிக்கும் கள்ள நோட்டுகளுடன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வருகின்றார்கள். இப்படி நாட்டில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்து வருகிறது.

Beware: Fake currency notes of Rs 10, 20, 50 are everywhere in Bangalore

இந்நிலையில் பெங்களூரில் கள்ளநோட்டு புழக்கம் சகஜமாகியுள்ளது. முன்னதாக 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் தான் புழக்கத்தில் இருந்தது. தற்போதோ 10 ரூபாய், 20 ரூபாய் அதிலும் குறிப்பாக 50 ரூபாய் கள்ளநோட்டுகள் பெங்களூரில் அதிகமாக புழக்கத்தில் உள்ளது.

காய்கறி வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், பஸ் கண்டக்டர்கள் என்று பலரிடம் பெறப்படும் நோட்டுகள் கள்ள நோட்டுகளாக உள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. பெங்களூர் ஜே.பி. நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற அதிகாரியான அருண் குமார் மோதக் என்பவரிடம் செய்தித்தாள் வினியோகிக்கும் நபர் 4 புது பத்து ரூபாய் நோட்டுகளை அளித்தார். அவரும் அந்த நோட்டுகளை மகிழ்ச்சியாக வாங்கினார்.

பின்னர் தான் அது போலி நோட்டுகள் என்று தெரியவந்து அந்த செய்தித்தாள் வினியோகஸ்தரை அழைத்து அவரிடம் அளித்தார். அந்த வினியோகஸ்தர் அது கள்ளநோட்டு என்று தெரிந்து தான் அளித்தார் என்பதை மோதக் தெரிந்து அதிர்ந்தார்.

சாப்ட்வேர் என்ஜினியரான அருணிமா என்பவர் ஆட்டோவில் பயணித்துள்ளார். அவரிடம் ஆட்டோ டிரைவர் 50 ரூபாய் நோட்டை அளித்தார். அதை சோதித்த அருணிமா அது கள்ள நோட்டு என்பதை கண்டுபிடித்து அந்த டிரைவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். இவ்வாறு பெங்களூரின் பல்வேறு இடங்களில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+