நீதான்யா கேப்டன்.. மனசாட்சி இல்லாமல் ஜடேஜா, பிஷ்னாய்க்கு பவுலிங் கொடுக்காமல் தவிர்த்த ரியான் பராக்!
ஜெய்ப்பூர்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் செய்த பவுலிங் மாற்றங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஜடேஜா மற்றும் ரவி பிஷ்னாய் இருவருக்கும் தலா ஒரேயொரு ஓவர் மட்டுமே கொடுத்தது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 12 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 103 ரன்களை விளாசினார்.

இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 31 பந்துகளில் 3 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 74 ரன்களையும், அபிஷேக் சர்மா 29 பந்துகளில் ஒரு சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 57 ரன்களையும் குவித்தனர். இதன் மூலமாக ஐதராபாத் அணி 5 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. இருப்பினும் ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். ஏனென்றால் ஃபார்மில் இல்லாத ஹெட்மயருக்கு எதன் அடிப்படையில் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதே இதுவரை தெரியவில்லை.
அதேபோல் ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் களத்தில் நின்றதால், இடதுகை ஸ்பின்னரான ரவீந்திர ஜடேஜா பவுலிங் செய்யவே அழைக்கப்படவில்லை. இடதுகை ஸ்பின்னரான ஜடேஜாவுக்கு மட்டுமல்லாமல் ரவி பிஷ்னாய்க்கும் இதுதான் நிலைமையாக இருந்தது. கடைசி வரை இருவரும் தலா ஒரு ஓவர் மட்டுமே வீசினர்.
இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு இடதுகை ஸ்பின்னர்கள் பவுலிங் செய்யக் கூடாது என்று கொடூரமான விதியை ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியின் தீவிரமாக பின்பற்றி வருகிறது. ஆனால் பிஷ்னாய் அல்லது ஜடேஜா உள்ளிட்டோரை பவர் பிளேவுக்கு பின் அட்டாக்கில் கொண்டு வந்திருந்தால், ஐதராபாத் அணிக்கு சவால் அளித்திருக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications