For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொது வேலைநிறுத்தம் மேற்கு வங்கத்தில் மோதல்… வன்முறை… பதற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் வன்முறையாக வெடித்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் காரணமாக மேற்குவங்கத்தில் பரவலாக பல்வேறு இடங்களிலும் கடைகள், சந்தைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால், பொது போக்குவரத்து வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின. தனியார் பேருந்துகள், டாக்ஸிகள் ஓடவில்லை.

பந்த் பாதிப்பு

பந்த் பாதிப்பு

செல்டா போன்ற புறநகர் பகுதியில் மட்டும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக மற்றபடி ரயில் போக்குவரத்து இயல்பாக இருப்பதாக கிழக்கு ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வன்முறை மோதல்

வன்முறை மோதல்

முர்ஷிதாபாத்தில் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கட்சி கொடி கட்டப்பட்டிருந்த கம்புகளுடன் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

கல்வீச்சு தாக்குதல்

கல்வீச்சு தாக்குதல்

சிக்கியவர்களை எல்லாம் இரு தரப்பினரும் கண்மூடிதனமாக தாக்கி கொண்டனர். கல்வீச்சிலும் ஈடுபட்டதால் அப்பகுதியே போர்க்கலமாக காட்சியளித்தது. இரு தரப்பினரையும் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

போலீஸ் குவிப்பு

போலீஸ் குவிப்பு

வன்முறை மட்டும் தடியடியில் பலருக்கு ரத்தம் காயம் ஏற்பட்டது. மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் வன்முறையால் முர்ஷிதாபாத்தில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Violence reported in West Bengal's Murshidabad, Howrah and North 24 Parganas. Educational institutions and commercial establishments are largely closed in Kolkata. The Trinamool Congress and CPI(M) members clash in Murshidabad. Police resorts to lathicharge to control the situation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X