வாஜ்பாய் பிறந்த நாள், நினைவு நாள் எதையும் விடாத 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் கனவு வேட்பாளர் நிதிஷ்!
பாட்னா: பாஜக நிறுவனரான முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் இன்று பாட்னாவில் மரியாதை செலுத்தியது 'இந்தியா' கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால் "இந்தியா" கூட்டணியில் இருக்கும் பல கட்சித் தலைவர்கள் எப்போது பாஜக பக்கம் சாய்வார்கள் என தெரியாத நிலைதான் இருந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை முன்வைத்து "இந்தியா" கூட்டணியை உடைக்கும் வேலைகள் கன கச்சிதமாக நடந்து வந்தது. சரத்பவாரும் பிரதமர் மோடியுடன் இணைந்து ஒரே மேடையில் பங்கேற்றார். அதானியுடன் விருந்து சாப்பிட்டார். ஆனாலும் 'இந்தியா' கூட்டணியில் இணைந்துதான் இப்போது வரை நிற்கிறார்.
வாஜ்பாய் நினைவு நாள்: இதேபோல கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி சென்றார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். 'இந்தியா' கூட்டணியையே உருவாக்கிய பிதா மகன் என தம்மை நினைத்துக் கொள்கிறவர். 'இந்தியா' கூட்டணியே தம்முடையது என தம்பட்டம் அடித்துக் கொள்கிறவர். ஆனால் டெல்லியில் ஆகஸ்ட் மாதம் வாஜ்பாய் நினைவு நாளில் அவரது நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் வயிற்றில் புளியை கரைத்தார்.
எதிர்க்கட்சிகள் முகத்தில் திகிலடித்த நிதிஷ்குமார்!”இந்தியா” அணியில் ஏகப்பட்ட பாஜக ஸ்லீப்பர் செல்கள்?
வாஜ்பாய் பிறந்த நாள்: இதேபோல இன்று வாஜ்பாய் 99-வது பிறந்த நாள். பாட்னாவில் உள்ள வாஜ்பாய் நினைவகத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். அப்போது, வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தேன். அவருக்கு என தனி மரியாதை உள்ளது என்றெல்லாம் விளக்கம் தந்திருக்கிறார் நிதிஷ்குமார்.
நிதிஷ்குமாரின் கனவு: இதே நிதிஷ்குமார், பாஜகவுக்கு எதிராக தம்மை 'இந்தியா' கூட்டணி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லையே என்ற கோபத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். வாஜ்பாய் மீதான நிதிஷ்குமாரின் பாசம், பாஜக பக்கம் இழுத்துக் கொண்டு போனாலும் ஆச்சரியப்படவில்லை என கிண்டலடிக்கின்றனர் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள்.
பிரதமர் மோடி: முன்னதாக வாஜ்பாயின் பிறந்தநாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி அவரை கூர்ந்தார். தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரதமர் மோடி, வாஜ்பாய் எப்போதும் உத்வேகத்தின் ஆதாரமாக இருப்பார் என்று கூறியுள்ளார். மேலும் சமூக ஊடக எக்ஸ் தளத்தில், “முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளில், நாட்டின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் சார்பாகவும் அவரைத் தலைவணங்குகிறேன். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக அவர் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். பாரத அன்னையின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்பும், சேவையும் அமிர்தக் காலத்தில் கூட உத்வேகம் அளிக்கும். எனவும் மோடி பதிவிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications