பீகாரில் தொடரும் துயரம்! ஒரே மாதத்தில் 3-வது பாலம் இடிந்து விழுந்ததால் பகீர்!
பாட்னா: பீகாரில் ஒரே மாதத்தில் கட்டப்பட்ட நிலையில் 3-வது பாலம் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடருகின்றன. ஏப்ரல் மாதம் 30-ந் தேதி கங்கை நதி மீது கட்டப்படுகிற ரூ1700 கோடி மதிப்பிலான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதன் மற்றொரு பகுதி ஜூன் 4-ந் தேதி இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதே ஜூன் மாதத்தில் 2-வது பாலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் இடிந்து விழுந்தது. கல்கலியா, அராரியா நதிகள் மீது கட்டப்பட்டு வரும் பாலம் ஒன்றின் ஒரு பகுதி சில நாட்களுக்கு முன்னர் இடிந்து விழுந்தது.
இந்த ஜூன் மாதத்தில் 3-வது சம்பவமாக மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் வைசாலி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. வைசாலி- ரகோபூர் ஆகியவற்றை இணைப்பதற்காக கங்கை நதி மீது பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதி ஆற்று நீரால் அடித்து செல்லப்பட்டது.
பீகார் மாநிலத்தில் கடந்த சில மாதங்களி 4 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. அதுவும் ஒரே மாதத்தில் 3 பாலங்கள் இடிந்து விழுந்து உள்ளன. இது தொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications