பிலாஸ்பூர் ரயில் விபத்து! பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு.. சத்தீஸ்கர் முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடந்த ரயில் விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மாலை சுமார் 4 மணியளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. கெவ்ரா பகுதியில் இருந்து பிலாஸ்பூருக்குச் சென்று கொண்டிருந்த MEMU பயணிகள் ரயில், சிக்னலை கவனிக்காமல் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இந்த விபத்தின் தாக்கம் மிகவும் மோசமாக இருந்தது. மோதிய வேகத்தில் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி, சரக்கு ரயிலின் பெட்டி மீது ஏறியது" என்று தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹5 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 இழப்பீடும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பிலாஸ்பூர் அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இது மிகவும் வருத்தமான செய்தி. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும், மேலும் அவர்களுக்கு ₹50,000 நிதியுதவியும் அளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் அருண் சாவ் இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பிலாஸ்பூரில் ஒரு துரதிர்ஷ்டவசமான ரயில் விபத்து நடந்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேல், இந்த விபத்துக்கு காரணம் மத்திய அரசுதான் என்று குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட, நிலக்கரி போக்குவரத்தில் அரசு அதிக கவனம் செலுத்தியதுதான் இந்த விபத்துக்குக் காரணம் என விமர்சித்திருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications