பன்றிக்காய்ச்சல் போச்சு... பறவைக்காய்ச்சல் பரவுது...: ஆந்திராவில் 1 லட்சம் கோழிகள் அழிப்பு
ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் 1 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன.
ஹைதராபாத்தை அடுத்துள்ள ரங்கா ரெட்டி மாவட்டம் தொர்ரூரு கிராமத்தில் உள்ள கோழிப் பண்ணையில் கடந்த ஒரு வாரத்தில் 20 ஆயிரம் கோழிகள் நோய் தாக்கி இறந்தன.

கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு கோழிகள் இறந்தது தெரியவந்தது. இந்த பண்ணையில் சுமார் 1 லட்சம் கோழிகள் உள்ளன.
சமீபத்தில் இறந்த கோழிகளை பண்ணையின் பின்புறம் வீசியதால், அவை மழையில் அடித்து செல்லப்பட்டுள்ளன.அங்குள்ள மற்ற கோழிகளுக்கும் பறவைக்காய்ச்சல் நோய் பரவியதாக விசாரணையில் தெரியவந்தது.

பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க அந்த பண்ணையில் இருந்த சுமார் 1 லட்சம் கோழிகளை உடனடியாக அழிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பண்ணையில் இருந்த கோழிகள் நேற்று அழிக்கப்பட்டு மொத்தமாக புதைக்கப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹைதராபாத், மேதக், நல்கொண்டா ஆகிய மாவட்டங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதா என சுகாதார துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். இதன் மூலம் ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இறைச்சிக் கோழியின் விலை குறைந்துள்ளது.

கடந்த 4 மாதகாலமாக ஆந்திரா, தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது பரவி வரும் பறவைக்காய்ச்சல் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications