ஆந்திராவை அலறவிடும் பறவை காய்ச்சல்! கறி கடைகளை ஒரு மாதம் மூட உத்தரவு! மனிதர்களுக்கு பரவுமா? பகீர்
விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் நெல்லூரில் திடீரென பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கே பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போதெல்லாம் திடீர் திடீரென புது வகையிலான வைரஸ்கள், கிருமிகள் பரவ ஆரம்பிக்கிறது. இதனால் மனிதர்களுக்கு மிக மோசமான பாதிப்பும் கூட ஏற்படுகிறது.

அப்படி தான் இப்போது ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு ஏராளமான கோழிகள் உயிரிழந்துள்ளன.
பறவை காய்ச்சல்: சதகுட்லா மற்றும் கும்மல்லடிப்பா பகுதிகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் சில நாட்கள் இடைவெளியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், மாதிரிகளை எடுத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது தான் அப்பகுதியில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து நோய் பரவலைக் கட்டுப்படுத்த அங்கே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோழிகள் இறந்த பகுதியில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோழிக்கடைகளை அனைத்தையும் அடுத்த மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கோழிக் கடைகளை மூன்று மாதங்களுக்கும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
10 ஆயிரம் கோழிகள்: கால்நடை அதிகாரிகள், கோழி இறைச்சியில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து, போபாலில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மட்டும் அங்குப் பறவை காய்ச்சல் காரணமாக சுமார் 10,000 கோழிகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்போது பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சதகுட்லா மற்றும் கும்மாலடிப்பா கிராமங்கள் 44 கிமீ தொலைவில் அமைந்துள்ளன. எனவே, இந்த இரு கிராமங்களுக்கு நடுவில் இருக்கும் கிராமங்களிலும் கூட பறவை காய்ச்சல் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, அங்கு உள்ள கோழிகளையும் சோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கோழிகளை எடுத்துச் செல்லவும் கட்டுப்பாடுகளை விதித்து நெல்லூர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகள் சொல்வது என்ன: இது தொடர்பாகக் கால்நடைத் துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், "திருப்பதி மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில் இருந்து வரும் பறவைகள் மூலம் இந்த கோழிகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்" என்றனர். 759 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பழவேற்காடு ஏரி இந்தியாவின் இரண்டாவது பெரிய உவர் நீர் ஏரியாகும்.
ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இங்கே பறவைகளை வரும். இங்கிருந்து பறவை காய்ச்சல் பரவி இருக்கலாம் என நெல்லூர் கால்நடை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கண்காணிப்பு பணிகள் தீவிரம்: இதையடுத்து நெல்லூரில் உள்ள மற்ற இடங்களில் அமைந்துள்ள கோழிப் பண்ணைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நோய் பரவுவதைத் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 721 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நெல்லூரில் மட்டும் 37 குழுக்கள் உள்ளன.
பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்களில் பல வகை திரிபுகள் உள்ளன. அதில் பெரும்பாலான வகைகள் பறவைகளுக்குள் தான் பரவும். மிக மிக அரிதான நேரங்களில் மட்டுமே அவை பறவைகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications