குழந்தையுடன் மணப்பெண்கள்.. 2 பெண்களை காதலித்து ஒரே மேடையில் 2 பேருக்கும் தாலி கட்டிய இளைஞர்
ஆந்திராவில் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்து இரண்டு பேரையும் ஒரே மேடையில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்.
அமராவதி: நமக்கெல்லாம் திருமணம் ஆகுமா? ஆகதா? என்ற ஏக்கத்துடன் சுற்றிக்கொண்டிருக்கும் 90 கிட்ஸ்களை பலரையும் வெறுப்பேற்றும் வகையில் ஆந்திராவில் ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆந்திராவில் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்து இரண்டு பேரையும் ஒரே மேடையில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்.
ஆந்திராவில் இளைஞர் ஒருவர் ஒரே மேடையில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.
90 கிட்ஸ்களை வெறுப்பேற்றும் வகையிலான இந்த நிகழ்வு ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கல்லூரி காலத்தில் காதல்
ஆந்திர மாநிலம் வைணவம் பகுதியில் எர்ர போடு என்ற மலைவாழ் பழங்குடியின இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பழங்குடியினத்தை சேர்ந்தவ மதிவி சத்தி பாபு (வயது 24) என்ற இளைஞருக்கும் சோழ பள்ளி என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண் ஸ்வப்ன குமாரி (19) என்பவரும் கல்லூரி படிக்கும் போது காதல் வயப்பட்டனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தும் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். இதனால், ஸ்வப்னா குமாரி கர்ப்பம் அடைந்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

இன்னொரு பெண்ணுடனும் காதல்
மதிவி சத்தி பாபு தனது உறவுக்கார பெண் குர்ன பள்ளி சுனிதா (வயது 19) என்பவரையும் காதலித்து வந்திருக்கிறார். இவருடனும் சத்தி பாபு நெருங்கி பழகியதால், சுனிதாவிற்கும் ஆண் குழந்தை பிறந்தது. சுனிதா திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றெடுத்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்கள் மகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அங்குள்ள பஞ்சாயத்தில் முறையிட்டனர். பஞ்சாயத்தில் சுனிதவை திருமணம் செய்து கொள்வதாக சத்தி பாபு உறுதி அளித்தார். இதன்படி, திருமண பத்திரிகை அடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சத்தி பாபு கொடுத்தார்.

இரண்டு பெண்களுக்கும் ஒரே மேடையில்
தடல் புடலாக திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது குறித்து சத்தி பாபுவின் மற்றொரு காதலியான ஸ்வப்ன குமாரிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்வப்ன குமாரி தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு சத்தி பாபு வீட்டிற்கு சென்றார். சத்தி பாபுவின் பெற்றோரிடம் தங்கள் மகளையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினர். இதற்கு சத்தி பாபுவின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததால் இரண்டு பெண்களுக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

சமாதனம் அடைந்த அதிகாரிகள்
இது குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது. அரசு அதிகாரிகள் கவனத்திற்கும் சென்றதால் உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் மணமகனை பிடித்து விசாரித்தனர். திருமணத்தை நடத்தக்கூடாது என மணமகனின் பெற்றோரிடம் அதிகாரிகள் கூறினர். இதனால் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவியது. அப்போது அங்குள்ள பழங்குடியின மக்கள் தங்கள் குல வழக்கப்படி 2 பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், வேறு வழியின்றி சமாதனம் அடைந்த அதிகாரிகளும் அங்கிருந்து சென்று விட்டனராம்.

ஒரே நேரத்தில் தாலி கட்டிய இளைஞர்
இதையடுத்து திருமணத்திற்கு இருந்த சிக்கல் நீங்கியதால், நேற்று காலை மணமகன் மற்றும் மணமகள்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு குழந்தைகளுடன் மேடைக்கு வந்தனர். மணமகன் சத்தி பாபு தங்கள் பழங்குடியின மரபுபடி 2 மணமகள்கள் கழுத்திலும் ஒரே நேரத்தில் தாலி கட்டினார். இந்த திருமணத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டனார். ஒரே மேடையில் மணமகள் கைகளில் குழந்தையுடன் அமர்ந்து இருக்க மணமகன் இரண்டு பேருக்கும் தாலி கட்டிய நிகழ்வு சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு இருந்து.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications