For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

33% பெண்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார்கள்.. பிஜு ஜனதா தளம் அதிரடி.. நவீன் பட்நாயக் புரட்சி!

லோக்சபா தேர்தலில் ஒடிசாவில் போட்டியிடும் பிஜு ஜனதா தளம் கட்சியை வேட்பாளர்களில் 33% பேர் பெண்களாக இருப்பார்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

புவனேஷ்வர்: லோக்சபா தேர்தலில் ஒடிசாவில் போட்டியிடும் பிஜு ஜனதா தளம் கட்சியை வேட்பாளர்களில் 33% பேர் பெண்களாக இருப்பார்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார்.

லோக்சபா தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் நடக்க உள்ளது. இதற்கான பணிகள் இப்போதே நடந்து வருகிறது.

இந்த தேர்தலுக்கு எல்லா மாநிலம் போலவே ஒடிசாவும் தீவிரமாக தயாராகி வருகிறது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் - பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஒடிசாவில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ராணுவ வீரர்களின் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது.. கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி! ராணுவ வீரர்களின் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது.. கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி!

சேரவில்லை

சேரவில்லை

ஆனால் இந்த கூட்டணி நினைத்தபடி உருவாக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் பிஜு ஜனதா தளம் இடம்பெறாது என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

அறிவிப்பு

அறிவிப்பு

ஒடிசாவில் மொத்தம் 21 லோக்சபா தொகுதிகள் உள்ளது. இதில் அனைத்திலும் பிஜு ஜனதா தளம் தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதில் 33% பெண்கள் போட்டியிடுவார்கள் என்று நவீன் பட்நாயக் தெரிவித்து இருக்கிறார்.

சூப்பர்

சூப்பர்

அதன்படி மொத்தம் 7க்கும் அதிகமான தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. அங்கு மொத்தம் தற்போது 2 பெண் எம்பிக்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதேபோல் அங்கு லோக்சபா தேர்தலுடன் ஒடிசா சட்டமன்ற தேர்தலும் நடக்க உள்ளது. இதனால் அதிலும் 33% பெண்கள் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

என்ன தீர்மானம்

என்ன தீர்மானம்

147 சட்டமன்ற உறுப்பினர்களில் 7 சட்டமன்ற பெண் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்று நவீன் பட்நாயக் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். கடந்த நவம்பரில்தான் அங்கு சட்டமன்றத்தில் 33% இடஒதுக்கீடு கொண்டு வர சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
BJD decides to give 33% of Lok Sabha tickets to women announces CM Naveen Patnaik.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X