பாக்கெட் பால் எல்லாம் பால் அல்ல.. பசும்பாலில் உள்ளது தங்கம்... மே.வங்க பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு
சர்ச்சை கருத்தை பாஜக தலைவர் மீண்டும் தெரிவித்துள்ளார்
கொல்கத்தா: "பசுவின் பாலில் தங்கம் உள்ளது.. பசுவின் முக்கியத்துவம் யாருக்கும் தெரியவதில்லை.. பாக்கெட் பால் என்பது உண்மையான பால் கிடையாது" என்று பாஜக தலைவர் மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கடந்த 2019-ல் இப்படித்தான் இதே கருத்தை சொல்லி இருந்தார்..
அப்போது, "இந்திய பசுக்களின் பால் லேசான மஞ்சள் கலரில் இருப்பதற்கு காரணம், அதில் தங்கம் கலந்திருப்பதால்தான்.. பசுக்களின் ரத்த நாளமானது சூரிய ஒளியின் உதவியோடு தங்கத்தை உற்பத்தி செய்கின்றன" என்று கூறியிருந்தார்.

திலீப் கோஷ்
திலிப் கோஷின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை அப்போது ஏற்படுத்தியிருந்தது.. இவர் பேச்சை உண்மை என்று நம்பி, தன்குனி பகுதியை சேர்ந்த ஒருவர், தன்னுடைய 2 பசுக்களையும் தனியார் நிதி நிறுவனத்திற்கு அழைத்து வந்து, இந்த 2 மாட்டுக்கும் எவ்வளவு தங்க கடன் கொடுப்பீர்கள், என் தொழிலை விருத்தி செய்ய, அந்த பணம் உதவியாக இருக்கும்? என்று கேட்ட ஆச்சரிய சம்பவமும் நடந்தது.

மேற்கு வங்கம்
இப்போதும் அதுபோலவே பேசி ஒரு பரபரப்பை கிளப்பி உள்ளார் கோஷ்... நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "மேற்கு வங்கத்தில் மாடுகளை வீடுகளில் சரியாக வைத்து வளர்க்கப்படுவதில்லை.. காரணம், மாடுகளை வீட்டில் வைத்திருப்பதன் முக்கியத்துவம் மக்களுக்கு புரியவில்லை... இன்னைக்கு எல்லோரும் பாக்கெட் பால் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். அது உண்மையான பால் கிடையாது..

பசும்பால்
பசுவின் பாலில் தங்கம் இருக்குன்னு அன்னைக்கு நான் சொன்னபோது, அனைவருமே என்னை விமர்சித்தனர்... கேலி செய்தனர்.. உண்மையான பாலை, சாப்பிடாதவர்களால், பசும்பாலில் தங்கத்தின் உண்மையான மதிப்பை மட்டும் எப்படி புரிந்துகொள்வார்கள்?' என்று பேசியுள்ளார் திலீப் கோஷ்.

சர்ச்சை
கோஷின் இந்த கருத்துக்கு பதிலளித்த மாநில அமைச்சரும், மூத்த தலைவருமான ஃபிர்ஹாத் ஹக்கீம், "அவரும் என்னெனன்வோ விஷயங்களை சொல்கிறார்.. இருந்தாலும் யாரும் அவர் பேச்சை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை.. தங்கத்துடன் பால் உற்பத்தி செய்யும் பசுமாட்டை தந்தால், அதை ஆராய்ச்சிக்கு வேண்டுமானால் அனுப்புவோம்.. ஆனால், அப்படி ஒரு பசுவை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், இப்படியெல்லாம் பேசி கொண்டிருப்பதை முதலில் நிறுத்தி கொள்ள வேண்டும்" என்றார்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
தனித்துவிடப்பட்ட மம்தா.. 20 எம்பிக்கள் கூண்டோடு பாஜகவுக்கு ஆதரவு.. திணறும் திரிணாமுல்












Click it and Unblock the Notifications