பாஜகவுக்கு எதிரான ஜிகாத்.. மமதா பிரகடனத்தால் மே.வங்கத்தில் தாக்குதல் வன்முறை அச்சம்- கடும் கண்டனம்
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் பாஜகவுக்கு எதிரான ஜிகாத் முழக்கத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவினர் மீதான வன்முறைகளை கட்டவிழ்த்துவிடவே மமதா இந்த முழகத்தை எழுப்பியுள்ளார் என்கிறது அக்கட்சி.
மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மமதா பானர்ஜியின் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் பேசிய மமதா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் ஆண்டுதோறும் கடைபிடிக்கும் மாவீரர் தினம்- தியாகிகள் தினம் ஜூலை 21-ல் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் மாவீரர் நாள்- தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படவில்லை. இந்த ஆண்டு ஜூலை 21-ல் நடைபெறும் தியாகிகள் தின கூட்டங்களில் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.

நம்முடைய தியாகிகள் தினத்தில் பாஜகவுக்கு எதிரான ஜிகாத்தை நாம் பிரகடனப்படுத்துவோம்; மேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்த உறுதியேற்போம் என கூறியிருந்தார். மமதாவின் பாஜகவுக்கு எதிரான ஜிகாத் முழக்கத்துக்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜகவின் ஐடி விங் பொறுப்பாளர் அமித் மாளவியா கூறுகையில், ஜூலை 21-ல் பாஜகவுக்கு எதிரான ஜிகாத்தை மமதா பானர்ஜி பிரகடனப்படுத்துவோம் என்கிறார். அதாவது மேற்கு வங்க மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட போகிறார் மமதா பானர்ஜி. மாற்று கருத்துகள் கொண்டோருக்கு எதிரான தாக்குதலுக்குதான் இந்த முழக்கம் என கூறியுள்ளார்.
முன்னதாக ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைர், குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதாவல்ட் கைதை கடுமையாக கண்டித்திருந்த மமதா பானர்ஜி, உங்கள் கட்சியினர் அவதூறு பரப்பும் போதும் வன்முறையில் ஈடுபடும் போதும் அமைதி காத்தவர்கள் நீங்கள்.. இப்போது ஏன் ஜூபைரை கைது செய்கிறீர்கள்? இப்போது ஏன் டீஸ்டாவை கைது செய்கிறீர்கள்? உங்கள் நடவடிக்கையை உலகமே கண்டித்து கொண்டிருக்கிறது என்றார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எம்பினு கூட பார்க்கலையே.. மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஓடஓட விரட்டி தாக்கிய மக்கள்.. ஷாக் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications