குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: 500க்கும் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கிய பா.ஜ.க.!
காந்திநகர்: குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் 500க்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி களமிறக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியோ 800க்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு உள்ளாட்சித் தேர்தல் ஒரு பெரும் சவாலாக இருக்கப் போகிறது. இடஒதுக்கீடு கொடு அல்லது இடஒதுக்கீட்டு முறையையே அழி என்ற முழக்கத்துடன் போராடி வரும் படேல் சமூகத்தின் போராட்டத்தை மிகக் கடுமையாக ஒடுக்கி உள்ளது குஜராத் அரசு.

இதனால் படேல் சமூகத்தினர், காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்துள்ளனர். படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் மீதான தேசத் துரோக வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். குஜராத் உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸுடன் கை கோர்ப்போம் என்று படேல் சமூகம் அறிவித்துள்ளது. இதுநாள் வரை பா.ஜ.க. வாக்கு வங்கியாகத்தான் படேல் சமூகம் இருந்து வந்தது.
அண்மையில் பீகார் சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையில் குஜராத் தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ.க. தோல்வி அடைந்தால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள் என அக்கட்சித் தலைவர் அமித்ஷா பேசிய பேச்சின் தாக்கம் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. ஆனாலும் இதைபற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாத பா.ஜ.க. குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் 500க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை வேட்பாளர்களாக்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியோ 800க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்த போது, உள்ளாட்சித் தேர்தலில் 300 முஸ்லிம்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். இதில் 250க்கும் அதிகமானோர் வெற்றி பெற்றிருந்தனர்.
குஜராத்தைப் பொறுத்தவரையில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 9%. இம்முறை பாரதிய ஜனதா 40% முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications