சிறுபான்மையினருக்கான 4% இடஒதுக்கீடு ரத்து.. “தேர்தல் வியூகம்”.. கர்நாடகா பாஜக அரசின் ‘ஷாக்’ முடிவு!
பெங்களூர் : சிறுபான்மையினருக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கர்நாடக மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மையினரை கொண்டுவர கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது. ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன. ஆட்சியை எப்படியாவது தக்கவைக்க வேண்டும் என்று பாஜக மும்முரம் காட்டி வருகிறது.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜகவின் முன்னணி தலைவர்கள் அடிக்கடி கர்நாடகாவுக்கு வந்து செல்கின்றனர். கர்நாடகா அரசியலில் ஒக்கலிகர், லிங்காயத் சமூகத்தினருக்கு பெரிய செல்வாக்கு உண்டு. இந்தச் சமூகத்தவரின் வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக சில மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக மாநில பாஜக அரசு, சிறுபான்மையினருக்கான 4 சதவீத ஒதுக்கீட்டை நீக்கி, இட இடஒதுக்கீட்டில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இன்று நடைபெற்ற கர்நாடக மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 56 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முஸ்லீம்களுக்கு தனியாக வழங்கப்பட்ட 4% இட ஒதுக்கீடு ரத்தாவதால், அவர்கள் இப்போது 10 சதவீத பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS) இட ஒதுக்கீட்டிற்கு மாற்றப்படுவார்கள்.
சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீடு இனி ஒக்கலிகர் சமூகத்தவருக்கு 2 சதவீதம், லிங்காயத்துகளுக்கு 2 சதவீதம் என அதிகரித்து வழங்கப்படும் என்றும் கர்நாடகா பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
-
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு?












Click it and Unblock the Notifications