காருக்குள் அரசியல்வாதி உல்லாசம்.. அதுவும் சுடுகாட்டில்? யாரிந்த கல்யாணமான பெண்? பிஜேபியில் இப்படியா?
கான்பூர்: இந்தியாவில் கள்ளக்காதல்கள் அதிகரித்து வருவதால், அதன்மூலம் குடும்ப உறவுகளும் சிதைந்து வருகின்றன. கொலை, தற்கொலைகளுக்கு கள்ளக்காதல்கள் காரணமாகிவிடும்போது, அவர்களது குடும்பமே நடுத்தெருவுக்கு வரும் சூழல் நடக்கிறது.. சிலர் நீதிமன்றம் வரை சென்றாலும்கூட, பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் விட்டுவிடுகிறார்கள்.. தற்போது இந்த கள்ளக்காதலுக்குள் பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து சிக்கி பொதுவெளியில் அசிங்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. அங்குள்ள பாஜக தலைவரின் பெயர் மனோகர்லால் தாக்கர்.. இவர் டெல்லி - மும்பை விரைவுச்சாலையில், பெண் ஒருவருடன் காரில் உல்லாசமாக ஈடுபட்டிருக்கிறார்..

இந்த செயலானது, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகிவிட்டது.. பிறகு அது வீடியோவாகவும், சோஷியல் மீடியாவில் தீயாய் பரவிவிட்டது.. யார் இதை பரவ விட்டது என்று தெரியவில்லை.
அதிர்ச்சி கேள்விகள்
இது அரசியல் கட்சிக்குள்ளும் மிகப்பெரிய அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.. ஒட்டுமொத்த மீடியாவிலும் இந்த வீடியோ பரவிவிட்ட நிலையில், மனோகர்லால் தாக்கர் மற்றும் அவருடன் சம்பந்தப்பட்ட அப்பெண்ணின் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அத்துடன், பாஜக நிர்வாகி பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.
எனினும், பாஜகவின் முக்கிய தலைவரே இப்படி பொதுவெளியில் நடந்து கொள்ளலாமா? கட்சி தொண்டர்கள் எப்படி மதிப்பார்கள்? என்று இணையத்தில் பல கேள்விகளும், விமர்சனங்களும் பரவின.. மத்திய பிரதேச சம்பவ அதிர்ச்சியே விலகாத நிலையில், தற்போது உத்தரப் பிரதேசத்திலும் ஒரு கொடுமை அரங்கேறியுள்ளது.
மாவட்ட செயலாளர்
புலந்தஷெஹர் மாவட்டத்தில் கைலாவன் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் உள்ள மயானத்தில், பாஜக நிர்வாகி ஒருவர், பெண்ணுடன் காரில் உல்லாசமாக இருந்துள்ளார்.. சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகி பெயர் ராகுல் வால்மீகி... பாஜகவின் பட்டியல் அணி மாவட்ட செயலாளராக பொறுப்பில் உள்ளாராம் ராகுல் வால்மீகி..
காரில் தகாத உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாம்.. இவர்கள் காருக்குள் அரை நிர்வாண நிலையில் தகாத உறவில் ஈடுபட்டபோது, அந்த கிராம மக்களே கையும் களவுமாக பிடித்ததுடன், அவர்களை வீடியோவும் எடுத்துள்ளனர்.. சுடுகாட்டு பகுதிக்கு யாருமே வர மாட்டார்கள் என்று நினைத்து, பாஜக நிர்வாகி, அங்கு பெண்ணை அழைத்து சென்றதாக தெரிகிறது. ஆனால், கிராம மக்கள் தங்களை சூழ்ந்து கொண்டதை அவர்கள் 2 பேருமே எதிர்பார்க்கவில்லை..
உடனே அந்த பெண், துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டார்.. ராகுல் வால்மீகி, கிராம மக்களிடம் மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினார்.. ஆனால் அம்மக்கள், ராகுல் வால்மீகி கெஞ்சியதையும் சேர்த்து வீடியோ எடுத்துவிட்டார்கள்..
வீடியோ இணையத்தில் வைரல்
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, மாநில பாஜக மேலிடம் ராகுல் வால்மீகியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது.. ஆனால், இந்தச் சம்பவம் குறித்து இதுவரை யாரும் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கவில்லை என்றும், அப்படி யாராவது புகார் தந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இப்போது என்ன விஷயமென்றால், பாலியல் செயலில் ஈடுபட்ட ராகுல் வால்மீகி தற்போது தலைமறைவாகி விட்டாராம்.. இதுதான் அம்மாநிலத்தில் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது. இதனிடையே, சுடுகாட்டில் காரில் எடுக்கப்பட்ட வீடியோ, இன்னமும் இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications