சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. மேற்கு வங்க தேர்தல் ரிசல்ட்டுக்குப் பின் கொடூரம்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் விரைவில் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் மத்தியகிராம் பகுதியில் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் நேர்முக உதவியாளர் சந்திரநாத் ரத் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பாஜகவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் சுவேந்து அதிகாரி. கடந்த தேர்தலின்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக-வுக்கு தாவினார். அப்போது பாஜக ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இதன் மூலம் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.

நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் பபானிபூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டார் சுவேந்து அதிகாரி. மேலும் நந்திகிராம் தொகுதியிலும் அவர் போட்டியிட்டார். பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். நந்திகிராம் தொகுதியில் 3-வது முறையாக வெற்றி வாகை சூடியுள்ளார் சுவேந்து அதிகாரி.
இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி தேர்வு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தாவில் வரும் 8 ஆம் தேதியன்று நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் மத்தியகிராம் பகுதியில் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் நேர்முக உதவியாளர் சந்திரநாத் ரத் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதாவது சந்திரநாத் ரத் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.
இதில் தலை, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மத்தியகிராம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவி வருவதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாஜக தலைவரின் நேர்முக உதவியாளார் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரநாத் ரத் பயணித்த காரின் முன்பக்கக் கண்ணாடி வழியாக மூன்று குண்டுகள் துளைத்துச் சென்று, சந்திரன் நாத்தின் உடலில் அடுத்தடுத்துப் பாய்ந்துள்ளன. ஒரு மோட்டார் சைக்கிளிலிருந்து இந்தக் குண்டுகள் சுடப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வாகனத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன, அதில், காரின் முன்பக்கக் கண்ணாடியில் மூன்று குண்டுகள் துளைத்ததற்கான அடையாளங்கள் தெளிவாகத் தெரிகின்றன.
அந்த மோட்டார் சைக்கிளில் பதிவு எண் பலகை ஏதும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அந்த பைக்கில் பயணித்தவர் யார்? தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளம் குறித்தும் காவல்துறையினருக்கு இதுவரை தெளிவான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications