For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேஜை மீது ஏறி நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ.. டெல்லி சட்டசபையில் பரபரப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபையில் பேச அனுமதி அளிக்கப்படாதைக் கண்டித்து பாஜக எம்.எல்.ஏ பெஞ்சின் மேஜை மீது ஏறி நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி சட்டசபைக் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற போது எதிர்க்கட்சித் தலைவரான பாஜக எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா, ஷீலா தீட்சித் ஆட்சியின்போது நடந்த குடிநீர் தொட்டி ஊழல் குறித்த உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும்.

BJP MLA Stands on Bench Inside Delhi Assembly

ஷீலா தீட்சித்தை ஆம் ஆத்மி காப்பாற்ற நினைக்கிறது. இதுதொடர்பாக ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றார். இதனை சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் ஏற்க மறுத்தார்.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அந்த அறிக்கையை தரத்தயாராக இருக்கிறார் என சபாநாயகர் கூறினார். அதேசமயம் நீங்களும் ஓய்வூதியம் ஊழலில் உங்கள் மனைவியின் பங்கு என்ன என்ற உண்மையை எனக்கு தரவேண்டும் என்றார்.

இதனால் கோபமடைந்த விஜேந்தர் குப்தா தனது இருக்கையைவிட்டு எழுந்து மேஜை மீது ஏறி நின்று, ஆம் ஆத்மி எதிர்க்கட்சிகளின் குரலை முடக்க நினைக்கிறது என்று கூறி அமளியில் ஈடுபட்டார். இது மிகவும் வெட்கக்கேடானது, அவையின் மாண்பை குறைப்பது என்று சபாநாயகர் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு அவையிலேயே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அப்போது அவரை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டித்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
bJP MLA Vijender Gupta is perhaps prone to 'high drama'. On Friday, Gupta, the Leader of the Opposition in Delhi Assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X