For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிசம்பரில் லோக்சபா தேர்தல்.. மோடி அதிரடி முடிவு?.. பரபரக்கும் டெல்லி!

இந்திய நாடாளுமன்றத்திற்கு, வரும் டிசம்பரிலேயே தேர்தலை நடத்த வைக்கலாம் என்று பாஜக முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    டிசம்பரில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிடும் மோடி?- வீடியோ

    டெல்லி: இந்திய நாடாளுமன்றத்திற்கு, வரும் டிசம்பரிலேயே தேர்தலை நடத்த வைக்கலாம் என்று பாஜக முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மோடியும் அமித் ஷாவும் இதற்காக கட்சியினர் இடையே ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நான்கு ஆண்டுகளை முடித்து தற்போது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பாஜகவின் ஆட்சி வரும் 2019 மே மாதத்துடன் முடிவடைகிறது.

    இந்த நிலையில், முன்னதாக இந்த வருடம் டிசம்பரிலேயே நாடாளுமன்ற தேர்தலை நடத்த வைக்க பாஜக முடிவெடுத்து இருக்கிறது. இதற்கு பின்பு பலவிதமான கணக்குளை பாஜக போட்டு வைத்துள்ளது.

    ஒன்றாக

    ஒன்றாக

    பாஜகவின் முக்கியமான விருப்பம் என்னவென்றால், நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒன்றாக தேர்தல் நடத்துவது. அதன்மூலம் தேசிய கட்சிகள் எளிதாக மாநில கட்சிகளை பின்னுக்கு தள்ள முடியும் என்று பாஜக நினைக்கிறது. அதேபோல் எளிதாக மாநிலங்களில் கால் பதிக்க முடியும் என்று நினைக்கிறது. ஆனால் இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    11 முக்கிய தேர்தல்

    11 முக்கிய தேர்தல்

    இந்த நிலையில் இந்த வருட இறுதியில் மொத்தம் 11 மாநிலங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. முறைப்படி மொத்தம் 4 மாநிலங்களில் மட்டுமே தேர்தல் நடக்க உள்ளது. ஆனால் இன்னும் 7 மாநிலங்களில் தேர்தலை நடத்த வைக்க பாஜக திட்டம் ஒன்றை வைத்துள்ளது. அதன்படி டிசம்பரில் தேர்தல் நடத்தினால், நாடாளுமன்ற தேர்தலும், பெரும்பாலான சட்டமன்ற தேர்தலும் பாஜகவின் விருப்பப்படி மாநில கட்சிகளின் அனுமதி இல்லாமலே ஒன்றாகவே நடக்கும்.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    இந்த மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம், சட்டம் இயற்றாமல் எளிதாக பாஜகவால் பல முக்கிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒன்றாக நடத்த முடியும். இதன் மூலம் ராஜ்யசபாவில் பாஜகவிற்கு மாநில எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் வழியே பாஜக நினைக்கும் சட்டங்களை எளிதாக இரண்டு அவையிலும் நிறைவேற்ற முடியும்.

    தேர்தல் எங்கே

    தேர்தல் எங்கே

    முறைப்படி தற்போது தேர்தல் நான்கு மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. அதாவது சட்டீஸ்கர், மத்திய பிரதேஷ், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடக்க உள்ளது. இந்த டிசம்பரில் இந்த மாநிலங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் மூன்றில் பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது.

     பாஜக ஆட்சி

    பாஜக ஆட்சி

    அதே சமயத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் அடுத்த வருடம் தேர்தல் நடக்க உள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா ஜார்கண்ட் ஆகிய ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடத்துகிறது. இங்கு அடுத்த ஜூன், ஜூலையில் தேர்தல் நடக்க உள்ளது. இங்கு ஆட்சியை கலைத்துவிட்டு இந்த டிசம்பரிலேயே தேர்தல் நடத்த திட்டமிட்டு இருக்கிறது பாஜக.

    தேர்தல் ஆணையம்

    தேர்தல் ஆணையம்

    அதேபோல் தேர்தல் ஆணையம் அதுவாகவே மூன்று மாநிலங்களில் தேர்தல் நடத்த உள்ளது. ஆந்திரா, தெலுங்கான, ஒடிசாவில் அடுத்த வருடம் ஏப்ரலில் தேர்தல் நடத்த உள்ளது. அதை முன்கூட்டியே செலவு கருதி டிசம்பரில் நடத்த வாய்ப்புள்ளது. இதனால் அங்கு சீக்கிரம் ஆட்சி கலையும் என்று கூறப்படுகிறது.

    ஒரே நேரத்தில் தேர்தல்

    ஒரே நேரத்தில் தேர்தல்

    இந்த நிலையில்தான் மொத்தமாக 11 மாநிலங்களிலும், நாடாளுமன்றத்திலும் ஒன்றாக தேர்தல் நடத்தலாம் என்று பாஜக திட்டம்மிட்டுள்ளது. அதன்படி சட்டீஸ்கர், மத்திய பிரதேஷ், மிசோரம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், ஆந்திரா, தெலுங்கான, ஒடிசா ஆகிய 11 மாநிலங்களிலும், நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடக்கும் வாய்ப்புள்ளது.

    தமிழகம் என்ன ஆகும்

    தமிழகம் என்ன ஆகும்

    அதேபோல் தமிழகத்திலும் இந்த டிசம்பரில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது பல காரணிகளை மையப்படுத்தி உள்ளது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, ரஜினி அதிமுகவில் சேர்வது, டிடிவி தினகரன் முடிவு, ஓபிஎஸ்- இபிஎஸ் இணைப்பு என பல முக்கியமான விஷயங்கள் தமிழக தேர்தலை நிர்ணயிக்கும். இது எல்லாம் கூடி வந்தால், தமிழகத்திலும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

    மிஷன் 360 என்றால் என்ன

    மிஷன் 360 என்றால் என்ன

    பாஜக நாடாளுமன்ற தேர்தலுக்கு என்று ஒரு திட்டம் வைத்துள்ளது. சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக நடத்துவதன் மூலம் 360க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற முடியும் என்று பாஜக நினைக்கிறது. இதன் மூலம் அடுத்த வருட தேர்தலுக்கு காத்திருக்கும் எதிர்க்கட்சிகள் நிலைகுலைந்து போகும். அவர்களால் தேர்தலுக்கு தயாராக முடியாது என்று பாஜக நினைக்கிறது.

    தொடங்கியது தேர்தல் ஜுரம்

    தொடங்கியது தேர்தல் ஜுரம்

    பாஜக ஏற்கனவே இந்தத்தேர்தலுக்கு தயாராகிவிட்டது என்று கூட கூறலாம். இப்போதே பல மாநிலத்தில் இருந்து தேர்தலில் பிரச்சாரம் செய்ய ஆட்களை அழைத்து இருக்கிறது. அதேபோல் அமித் ஷா பிரபலங்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். இதனால் எப்போது வேண்டுமானாலும், இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியாகி வாய்ப்புள்ளது .

    English summary
    BJP and Modi plan for Lok Sabha election in this December according to the sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X