கரெக்டா இந்த நேரத்துல மட்டும் மம்தா பானர்ஜிக்கு ஏதாவது ஆகிடுதே எப்படி? சந்தேகம் கிளப்பிய பாஜக!
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயமடைந்து சக்கர நாற்காலியில் செல்லும் புகைப்படம் வெளியான நிலையில், சந்தேகம் கிளப்பியுள்ளது பாஜக.
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மாநிலத்தின் வட மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.

பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேற்று (ஜூன் 27) மதியம் கொல்கத்தா திரும்புவதற்காக ஹெலிகாப்டரில் பாக்டோக்ரா செல்லவிருந்தார் மம்தா பானர்ஜி. ஜல்பைகுரியில் இருந்து கொல்கத்தா செல்வதற்காக பாக்டோக்ரா நோக்கி ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது, கனமழை பெய்ததால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பைகுந்தபூர் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது, மம்தா பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சிலிகுரி அருகே உள்ள செவோக் விமான தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதும் மம்தா பானர்ஜி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
மம்தா பானர்ஜியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இடது முழங்கால் மற்றும் இடுப்பு பகுதியில் காயம் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியும், அவர் அங்கிருந்து கிளம்பினார்.
வீட்டில் இருந்தபடியே அவர் சிகிச்சை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் இருந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மம்தா பானர்ஜி காரில் ஏறும் காட்சிகள் வெளியானது திரிணாமுல் கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது மம்தா பானர்ஜி காயமடைந்து வீல் சேரில் இருந்தபடியே பிரச்சாரம் மேற்கொண்டார். நந்திகிராமில் பிரச்சாரத்தின்போது காலில் காயமடைந்ததால், மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் பிரச்சாரம் செய்தார். இதையடுத்து, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்த மஜும்தார், மம்தா பானர்ஜி விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். எனினும், எப்படி மம்தா பானர்ஜிக்கு எப்படி சரியாக தேர்தல் நேரத்தில் இதுபோன்று காயம் ஏற்படுகிறது என கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications