இலவச ஸ்கூட்டி, லேப்டாப் - கவர்ச்சிகரமான அறிவிப்புகள்.. வெளியானது மணிப்பூர் பாஜக தேர்தல் அறிக்கை!
இம்பால்: மணிப்பூர் மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.
மணிப்பூரில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. ஆனால் பெரும்பான்மை இல்லாமல், மாநில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது பாஜக. இந்தத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது பாஜக.
மணிபூரில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு நேரடி போட்டி நிலவி வருகிறது. மணிப்பூரில் உள்ள 60 சட்டசபைத் தொகுதிகளிலும் விறுவிறுப்பான பிரசாரத்தை இரு கட்சிகளும் செய்து வருகின்றன.

பாஜக
மணிப்பூரில் பாஜக இந்த முறை தனித்து போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில், பாஜக கூட்டணியிலிருக்கும் நாகா மக்கள் முன்னணியும், தேசிய மக்கள் கட்சியும் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், பார்வர்டு ப்ளாக் கட்சி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, மதசாற்பற்ற ஜனதாளம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன. தனித்துப் போட்டியிடுவதாலும் மாநில பாஜகவுக்குள் உட்கட்சிப் பூசல் நடப்பதாலும் மணிப்பூரில் பாஜகவுக்கு கொஞ்சம் பின்னடைவாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

பாஜக வாக்குறுதி
அனைத்து கட்சிகளும் மணிப்பூரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மணிப்பூர் மாநில பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
பாஜக தேர்தல் அறிக்கையில், ''பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு அவர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்காக ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இலவச ஸ்கூட்டி
கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி, 12ம் வகுப்பில் சிறப்பான தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப், சிறு, நடுத்தர மற்றும் நிலமற்ற விவசாயிகளின் பிள்ளைகள் தொழிற்கல்வி படிப்பதற்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும், மணிப்பூர் திறன் பல்கலைக்கழகம் நிறுவப்படும், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் பென்சன் 1000 ரூபாயாக உயர்த்தப்படும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்'' என தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல்
மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் மொத்தம் உள்ள 60 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டத் தேர்தல் வரும் பிப்ரவரி 28ம் தேதி 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. மீதம் உள்ள 22 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக மார்ச் மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 60 இடங்களிலும் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் களமிறங்குகிறது. மணிப்பூர் காங்கிரஸ், நாகா கட்சி என மாநிலக் கட்சிகளும் வலுவாக களத்தில் இறங்கியுள்ளன.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications