4 குழந்தைகளைத்தான் பெற்றெடுக்கச் சொன்னேன்… 40 நாய்களை அல்ல: சர்ச்சை சாத்வி
டெல்லி: பிரதமர் மோடியின் எச்சரிக்கையை மீறியும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சாத்வி பராசி, மதம் குறித்து ஆவேசமாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
நான் இந்து மதம் சேர்ந்தவர்கள் மட்டும் நான்கு குழந்தை பெற்றுக் கொள்ள வாதிட்டேன், 40 நாய்குட்டிகளை அல்ல..... இது மிகவும் முக்கியமானது, எனென்றால் இது நாட்டிற்கு தேவையானது என்றும் சாத்வி பராசி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் பாஜகவின் தலைவர் சாத்வி பராசி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "அவர்கள் 'லவ் ஜிகாத்' மூலம் நமது மகள்களை பிடிக்கின்றனர்.
35-40 வரையில் பெற்றுக் கொள்கிற இவர்கள் லவ் ஜிகாத்தை பரப்புகின்றனர். அவர்கள் இந்துஸ்தானை தாருல் இஸ்லாமா மாற்ற முயற்சி செய்கின்றனர். நான் இது தொடர்பாக எப்போது கருத்து தெரிவித்தேனோ, அப்போது நாட்டினை ஒரு நிலநடுக்கம் தாக்கியது போல் இருந்தது.

40 குழந்தைகள்
நான்கு குழந்தைகள் கருத்து மூலம் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறீர்கள் என்று மீடியாக்கள் தெரிவிக்கின்றன. நான் இந்து மதம் சேர்ந்தவர்கள் மட்டும் நான்கு குழந்தை பெற்றுக் கொள்ள வாதிட்டேன், 40 அல்ல...... இது மிகவும் முக்கியமானது, எனென்றால் இது நாட்டிற்கு தேவையானது," என்று கூறினார்.

தாய் மதம் திரும்புங்கள்
இந்துக்களுக்கு மட்டும் குடும்ப கட்டுப்பாடு செயல்படுத்தப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள பராசி, "கார் வாப்சி" குறித்து பேசுகையில், சுமார் 1,400 வருடங்களுக்கு முன்னர் அனைவரும் இந்துக்களாகவே இருந்தோம். "உ.பி. மந்திரி அசாம்கான், ஜமா மசூதி இமாம் புகாரி, முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் மற்றும் யூசுப் ராசா கிலானி ஆகியோர் மதமாற்றம் செய்துக் கொள்ள வேண்டும். அவர்கள் "கார் வாப்சி"யை (தாய் மதம் திரும்புதல்) பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நான் காதலுக்கு எதிரானவர் இல்லை ஆனால் லவ் ஜிகாத்திற்கு எதிரானவள். என்று பராசி பேசியுள்ளார்.

விலகிய பாஜக
பராசியின் இத்தகைய கருத்தில் இருந்து பாஜக விலகிக் கொண்டுள்ளது. இதுபோன்ற கருத்துக்களை பாஜக ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற எந்தபிரச்சினை பற்றியும் விவாதிக்க கட்சி ஆர்வமாக இல்லை என்று தெரிவித்துள்ளது.

குழந்தை பெற்றவர்களுக்கு கவுரவம்
நிகழ்ச்சியில் 4 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட 20 பேருக்கு தேவையான வசதிகளை பராசி செய்துக் கொடுத்துள்ளார். இதில் 11 குழந்தைகள் பெற்ற துவாரிகா சிங், 9 குழந்தைகளை பெற்ற ராம்பால் சிங், சுர்நாம் சிங் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் பட்டியலில்
பராசி கடந்த 2012-ம் ஆண்டு உத்தரபிரதேசம் மாநிலம் புர்காசி சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டவர். கடந்த 2013-ஆம் ஆண்டு முசாபர்நகரில் கலவரம் நடைபெற்றபோது, கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றவர். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

மோடி எச்சரிக்கை
இவருடைய சமீபத்திய வெறுக்கதக்க பேச்சை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, கட்சி தலைவர்களை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
-
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவிடம் காட்டிய அந்த லிஸ்ட்! 170 தொகுதிகளில் இறங்குவது யாரெல்லாம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்












Click it and Unblock the Notifications