தொகுதி பங்கீட்டில் மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம்... ஆந்திராவில் பாஜக- தெலுங்குதேசம் கூட்டணி முறி
ஹைதராபாத்: தொகுதிப் பங்கீட்டில் சுமூகத் தீர்வு எட்டப்படாததையொட்டி ஆந்திராவில் பாரதீய ஜனதா மற்றும் தெலுங்குதேசம் இடையேயான கூட்டணி முறிந்துள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப் பட்டதையடுத்து ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைக்க பாஜக முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் மாநில விவகார பொறுப்பாளர் பிரகாஷ் ஐவதேகர் ஆந்திரா வந்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஆந்திராவில் பாஜகவுக்கு குறைந்த தொகுதிகளே ஒதுக்க முடியும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், அதனை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை.
கிட்டத்தட்ட 10 நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு குறித்து தெளிவான உடன்பாடும் ஏற்பட வில்லை. இதனையடுத்து ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜனதா உறவு முறிந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது. எனவே, ஆந்திராவில் பாஜக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தெலுங்கானா பகுதி பா.ஜனதா தலைவர் கிஷண் ரெட்டி கூறுகையில், ‘தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமையவில்லை. அவர்கள் தொகுதி ஒதுக்குவது மலைக்கும் மடுவுக்கும் போன்ற வித்தியாசம் உள்ளது. தெலுங்கானா பகுதியில் பா.ஜனதா 119 சட்டசபை தொகுதியில் 17 நாடாளுமன்ற தொகுதியிலும் பா.ஜனதா தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. நாளை உகாதியன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளோம்.
தெலுங்கு தேசம் கட்சியால் ஆந்திராவில் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. தனித்து நின்றால் தெலுங்கு தேசம் கட்சி போணியாகாது' என இவ்வாறு அவர் கூறினார்.
சீமாந்திரா பகுதி பா.ஜனதா தலைவர் அரிபாபு கூறுகையில், ‘‘சீமாந்திரா பகுதியில் பா.ஜனதா இருபத்தைந்து லோக்சபா தொகுதியிலும், 175 சட்டமன்ற தொகுதியிலும் தனித்து போட்டியிடும் எனத் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications