லட்சக்கணக்கில் திரண்டவர்கள் விவசாயிகள் இல்லையாம்.. தீவிரவாதிகளாம்... பாஜக கிண்டல்
மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகள் எல்லோரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று பாஜக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.
Recommended Video

மும்பை: மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகள் எல்லோரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று பாஜக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.
6 நாட்களுக்கு முன்பு நாசிக்கிலிருந்து தொடங்கிய விவசாயிகள் நடைபேரணி தற்போது மும்பை வரை வந்து இருக்கிறது. இப்போதே 50 ஆயிரம் பேர் வரை பேரணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இன்று அவர்கள் அம்மாநில சட்டசபையை முற்றுகையிட போகிறார்கள். மேலும் அம்மாநில அரசு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையும் நடக்க இருக்கிறது.

வவிவசாயிகள்
இந்த பேரணியில் கலந்து கொண்டது விவசாயிகள் இல்லை என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டு இருக்கிறார். இதில் இருக்கும் 95 சதவிகித பேருக்கு விவசாயம் என்றால் என்ன என்றே தெரியாது என்று மோசமான கருத்தை கூறியுள்ளார். அவர்கள் எல்லோரும் ஆதிவாசிகள் மட்டுமே என்றுள்ளார்.

மாவோயிஸ்டுகள்
அதேபோல் பாஜக கட்சியின் எம்.பி பூனம் மகாஜன் இன்னொரு மோசமான கருத்தை தெரிவித்து இருக்கிறார். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் எல்லோரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். கிராமத்தில் இருந்து வந்த மாவோயிஸ்டுகள் என்றுள்ளார்.

பதில்
இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. முதலில் சென்று பத்திரிக்கைகள் படியுங்கள், மக்களுடன் பழகுங்கள், அப்போதுதான் யார் தீவிரவாதிகள், யார் விவசாயிகள் என்று தெரியும் என்று கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி.ராஜேஷ் தெரிவித்து இருக்கிறார். இன்னும் சிலர் பாஜகவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தையில் பிரச்சனை
இவ்வளவு பிரச்சனைக்கு இடையில்தான் மாநில அரசு விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறது. இன்று மதியம் இந்த பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. 12 பேர் கொண்ட விவசாயிகள் குழு இதில் பங்கேற்கும் . 6 பேர் அடங்கிய அரசு குழு இதில் கலந்து கொள்ளும். ஆனால் பாஜகவின் இந்த கருத்தால் பேச்சுவார்த்தை நடப்பதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications