மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் ஆட்சி அதிகாரத்திற்காக ஏங்குகிறது பாஜக: சோனியா குற்றச்சாட்டு
பெங்களூர்: நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ கவலைப்படாமல் ஆட்சி அதிகாரத்திற்காக மட்டுமே பாஜக ஏங்குகிறது என குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி.
கர்நாடக மாநிலம் குல்பர்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி.
அப்போது அவர் கூறியதாவது:-

பயன் தரும் திட்டங்கள்....
கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் உணவு பாதுகாப்பு சட்டம், தகவல் பெறும் உரிமை சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் உள்பட மக்களுக்கு பயன் அளிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

பாஜகவின் சதித்திட்டம்....
உங்களுக்காக பணியாற்றுகிறவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பா.ஜனதா செயல்படுகிறது.ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் குறிப்பாக பா.ஜனதா சதித்திட்டம் உட்பட எதையும் செய்ய தயாராக இருக்கிறது.

மதவாதம் மூலம் அரசியல் லாபம்....
அந்த கட்சியிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். மதவாதம் செய்து அதன் மூலமாகவே அரசியல் லாபம் தேடிக்கொள்ளும் கட்சியிடம் இருந்து நாட்டுக்கு எந்த பயனும் ஏற்படாது. அக்கட்சி மக்களிடம் விஷத்தை விதைக்கிறது.

ஒளிமயமான எதிர்காலத்திற்கு....
ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரஸ் ஏங்கவில்லை. ஆனால் நாட்டை பற்றியும், மக்களை பற்றியும் கவலை அடைகிறது.உங்களின் ஒளிமயமான எதிர்காலம் பற்றி காங்கிரஸ் கவலைப்படுகிறது. அதனால் காங்கிரசுக்கு மீண்டும் ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications