ராஜ்யசபா சீட் கொடுத்து மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வளைக்க ஸ்கெட்ச்- ஆந்திராவில் பாஜகவின் செம்ம வியூகம்!
அமராவதி: ஆந்திரா சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநிலத்தில் வலுவாக காலுன்றுவதற்கு தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியை மீண்டும் அரசியல் களத்துக்கு கொண்டு வருவதற்கு பாஜக படுதீவிரமாக முயற்சிக்கிறதாம். சிரஞ்சீவிக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து பாஜகவில் குடும்பத்துடன் இணைய வைக்க பேச்சுவார்த்தைகள் ஜரூராக நடந்து வருகிறதாம்.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆந்திராவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. தென்னிந்திய திரை உலகில் கொடி கட்டிப் பறக்கும் சிரஞ்சீவி 2008-ம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி தேசிய கட்சிகளை தெறிக்கவிட்டார். 2009-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலில் மொத்தம் 294 இடங்களில் 18 இடங்களை பிரஜா ராஜ்ஜியம் கைப்பற்றியது. 16% வாக்குகளை சிரஞ்சீவி கட்சி பெற்றது. ஆனால் சிரஞ்சீவியால் தொடர்ந்து கட்சியை நடத்த முடியாமல் 2011-ல் காங்கிரஸில் கட்சியுடனேயே ஐக்கியமானார். மத்திய அமைச்சராகவும் சிரஞ்சீவி பதவி வகித்தார். பின்னர் ஒட்டுமொத்தமாக தீவிர அரசியலில் இருந்தே சிரஞ்சீவி ஒதுங்கிவிட்டார்.

சிரஞ்சீவியின் சகோதரர் நாகேந்திர பாபு, திரைப்பட தயாரிப்பாளர். மற்றொரு சகோதரர் பவன் கல்யாண், ஜனசேனா கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியுடனும் பவன் கல்யாண் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. சிரஞ்சீவி குடும்பத்தில் அல்லு அர்ஜூன், அல்லு சிரிஷ், வருண் தேஜ், நடிகை நிகாரிகா, சாய் தரம் தேஜ், வைஷ்ணவ் தேஜ் என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் உள்ளனர்.
இதனால் தற்போது பாஜகவின் கவனம் சிரஞ்சீவி பக்கம் திரும்பி இருக்கிறது. ஆந்திராவில் பாஜக என்ற கட்சியே இல்லை. 2019 தேர்தலில் நோட்டாவுக்கு கீழேதான் வாக்குகளே கிடைத்தன. ஆந்திராவில் பாஜக காலூன்ற வேண்டும் எனில் சிரஞ்சீவி போன்ற மெகா ஸ்டார் ஆதரவு தேவை என்பதால் இப்போது காய்களை நகர்த்தி வருகிறதாம். உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒன்றை சிரஞ்சீவிக்கு கொடுக்க பாஜக பேரம் பேசுகிறதாம். ராஜ்யசபா சீட் கொடுத்து சிரஞ்சீவியை பாஜகவுக்குள் கொண்டு வந்துவிட்டால் ஆந்திராவின் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றான காப்பு வாக்குகள் கிடைக்கும்; பாஜகவும் காலூன்றி விடும் என்பதுதான் டெல்லி மேலிடத்தின் கணக்காம். சிரஞ்சீவி மீண்டும் அரசியலில் கால் பதிப்பாரா? என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications