நாகாலாந்து சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு... பாஜக தடலாடி 'அந்தர் பல்டி'
நாகலாந்து சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு முடிவை மாற்றிக் கொண்டுள்ளது பாஜக.
Recommended Video

கோஹிமா: நாகலாந்து சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு முடிவை திடீரென பாஜக மாற்றிக் கொண்டுள்ளது. தேர்தல் புறக்கணிப்பு தீர்மானத்தில் கையெழுத்திட்ட கேட்டோ செமாவை பாஜக கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பென்ட் செய்துள்ளது.
நாகாலாந்தின் பல பகுதிகள் அஸ்ஸாம், அருணாச்சலபிரதேசம் மற்றும் மணிப்பூரில் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை இணைத்து நாகாலிம் என்ற அகன்ற நாகாலாந்து அமைக்க வேண்டும் என்பது அரசியல் கட்சிகளின் கோரிக்கை. அகன்ற நாகாலாந்து என்ற தனிநாடு அமைக்க வேண்டும் என்பது நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் போன்ற ஆயுதக் குழுக்களின் இலக்கு.

தீராத பிரச்சனை
இது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. ஆனால் பிரச்சனை முடிவுக்கு வந்தபாடில்லை. இதனால் பிரச்சனை தீரும்வரை சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என நாகா பழங்குடி மக்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

பாஜக, காங்கிரஸ் அதிரடி
இதனை ஏற்று பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சிகள், சட்டசபை தேர்தலை புறக்கணிக்கும் தீர்மானத்தில் கையெழுத்திட்டன. மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நாகாலாந்து பாஜக முடிவெடுத்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்
இந்நிலையில் நாகாலாந்து தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளரான உள்துறை இணை அமைச்சர் கிர்ரன் ரிஜுஜூ, அரசியல் சாசனப்படி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். அத்துடன் தேர்தல் புறக்கணிப்பு தீர்மானத்தில் கையெழுத்திட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் கேட்டோ செமாவை அக்கட்சி சஸ்பென்ட் செய்துள்ளது.

ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
இதேபோல ஆளும் நாகாலாந்து மக்கள் முன்னணியின் பின்வாங்கியுள்ளது. ஆனால் கட்சியின் இம்முடிவை 10 எம்.எல்.ஏக்கள் நிராகரித்து ராஜினாமா செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் ரியோவின் நாகாலாந்து ஜனநாயக முன்னேற்றக் கட்சியில் 10 எம்.எல்.ஏக்களும் ஐக்கியமாகிவிட்டனர். இதனால் நாகாலாந்து அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications